இறந்து போன.. பெற்றோர் அடையாளத்தை எப்படிங்க நிரூபிப்பது? SIR மூலம் ஏற்பட்ட சிக்கல்.. மோசமான நிலைமை!
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தொடங்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுவோமோ என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
1. SIR செய்யும் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளன. இந்த பணிகளில் பங்கேற்க பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது.

2. பலர் சொந்த ஊர்களில் இருந்தாலும் உங்கள் பெயர் லிஸ்டில் இல்லை.. உங்கள் பெயர் வேறு வார்டில் உள்ளது. நீங்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
3. என் பெயர் 2002 ஆம் ஆண்டு பட்டியலில் இல்லை. என் அப்பா நான் சிறு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். இப்போது நான் என்ன செய்வது? என்று பல்ர் கேட்க தொடங்கி உள்ளனர்.
4. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, உங்கள் அடையாளம் மற்றும் இரண்டு பெற்றோரின் அடையாளங்களையும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கட்டாயம் தேவை. இவை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள ஆவணங்களாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களில் பெயர்கள், அத ஸ்பெல்லிங் மாற வாய்ப்புகள் இருப்பதால்.. பலரும் சிரமப்படுகின்றனர்.
5. 1987 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கும் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்கள், தங்கள் சொந்த அடையாளத்தையும் ஒரு பெற்றோரின் அடையாளத்தையும் நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும். இவை இரண்டும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் பலருக்கு பெற்றோரின் அடையாளத்தை நிரூபிக்கும் வாய்ப்புகள் இல்லை.
6. பெற்றோர்கள் இறந்து பல காலம் ஆனவர்கள் அதன் அடையாளங்களை நிரூபிக்க முடியாது. இதனால் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
7. ஒரே வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒருவருக்கு.. நீங்கள் இந்த வார்டு வாருங்கள்.. நீங்கள் இந்த வீட்டில் இருந்த போது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துள்ளீர்கள். அதனால் அங்கேதான் உங்கள் பூத் அதிகாரி வருவார். எனவே அங்கே சென்றால்தான் பார்ம் கிடைக்கும். அதேபோல் வீட்டில் இருக்கும் இன்னொருவரிடம் நீங்கள் அந்த அலுவலகம் செல்லுங்கள். அங்கேதான் உங்களுக்கு அட்டை விவரங்கள் உள்ளன என்று ஒரே வீட்டில் உள்ள பலருக்கு வேறு வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பலர் அலையவிடப்படுவதாக கூறப்படுகிறது.
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்பது என்ன?
இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட SIR, குறிப்பிட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க, வீடு வீடாகச் சென்று சரிபார்த்துத் திருத்தும் ஒரு விரிவான திட்டமாகும். இது வழக்கமான வருடாந்திர அல்லது சுருக்கத் திருத்தங்களிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யும் கால வரையறைக்குட்பட்ட, தீவிரமான செயலாகும்.
மேலும், இறந்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்கள் போன்ற இரட்டைப் பதிவுகளை இத்திட்டம் நீக்கும். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல்கள் காலாவதியாகிவிட்டாலோ, பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு முக்கிய தேர்தலுக்கு முன்னதாகவோ SIR செயல்முறை தொடங்கும் என்று ECI தெரிவித்துள்ளது.
SIR 2.0 வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் 13 ஆவணங்கள்:
SIR 2.0 சரிபார்ப்புச் செயல்பாட்டின்போது அடையாளச் சான்று, வயதுச் சான்று அல்லது இருப்பிடச் சான்றாகப் பயன்படுத்தக்கூடிய 13 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அவை, மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதியப் பண ஆணை
உள்ளூர் அதிகாரி, வங்கி, அஞ்சல் அலுவலகம், LIC அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஜூலை 1, 1987க்கு முன் வழங்கப்பட்ட அரசு அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
இந்திய அரசால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் மெட்ரிகுலேஷன் அல்லது கல்விச் சான்றிதழ்,
மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வதிவிடச் சான்றிதழ்,
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட வன உரிமைச் சான்றிதழ், உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட OBC/SC/ST அல்லது சாதிச் சான்றிதழ்,
பொருந்தும் இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து எடுக்கப்பட்ட பதிவு,
மாநில அல்லது உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவு,
அரசால் வழங்கப்பட்ட நிலம்
வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்,
ஆதார் அட்டை (அடையாளச் சான்றாக மட்டுமே, குடியுரிமைக்கு அல்ல)
ஆதார் மட்டும் போதுமான ஆதாரமாகாது . குடியுரிமை அல்லது வயதை நிரூபிக்க ஆதார் அட்டை மட்டும் போதுமானதல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. SIR 2.0-க்கு ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கும் வாக்காளர்கள், தேவைப்பட்டால் சரிபார்ப்புக்கு வேறு தகுதியான ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications