"தீபா டீச்சர் எங்கே?".. பற்றி எரியும் பாபா பரபரப்பு.. ஜாமீன் கோரி ஹைகோர்ட்டுக்கு ஓடிய ஆசிரியை..!
முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் பள்ளி ஆசிரியை தீபா
சென்னை: சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியை தீபா, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மேலும் பரபரப்பை ஏற்படுததி வருகிறது.
பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 15 வருஷங்களுக்கும் மேலாக சிவசங்கர் பாபா தன்னுடைய பள்ளியில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்து வந்துள்ளார்.. இதையடுத்து, மாமல்லபுரம் மகளிர் போலீசார் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்து, கைதும் செய்துள்ளனர்..

போலீசார்
சிபிசிஐடி போலீசாரும் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளனர்.. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், மேலும் மாணவிகளை மூளை சலவை செய்ததாக பக்தை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

புகார்
அப்போதுதான் தன்னுடைய பள்ளியில் பணியாற்றி வரும் 2 டீச்சர்களை பற்றி பாபா சொன்னார்.. பாரதி, தீபா என்ற 2 ஆசிரியைகளும் கட்டாயப்படுத்தி மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ஆசைக்கு இரையாக்கி உள்ளனர்.. இந்த விவரங்கள், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, பாரதி, தீபா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

2 ஆசிரியர்கள்
எனவே, இவர்களும் எந்நேரமும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து வருவதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஆசிரியை தீபா வீட்டிற்கு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால், சுதாரித்து கொண்ட டீச்சர் தீபா, தமது வீட்டை பூட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.. அவரை பற்றி எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.. எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை..

பாதி
இன்னொரு டீச்சர் பாரதி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. இந்நிலையில்தான், இங்கிலீஷ் டீச்சர் தீபா, முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகொர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகிறேன்.. பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

மனு தாக்கல்
இந்நிலையில் எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர் போக்சா சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றது. எனக்கு எதிரான குற்றச்சாட்டு எந்த உண்மையும் இல்லை.. எனவே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளேன்" என்று தனது மனுவில் கூறியுள்ளார்...

விசாரணை
இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தீபாவுக்கு கோர்ட் முன்ஜாமீன் வழங்குமா? அல்லது அதற்கு முன்னரே போலீசார் அவரை கைது செய்வார்களா? என்று தெரியவில்லை.. ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு பிடி மேலும் இறுகி கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications