சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரா போறீங்க.. 3ம் நம்பர் பொத்தான்.. ஒரே அமுக்கு.. நான் ஜெயிச்சுருவேன்.. எச். ராஜா சொல்றதை கேளுங்க

சாவடியில் 3-ம் எண்ணை அழுத்தி தன்னை வெற்றி பெற செய்யுமாறு எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செய்யுங்க" என்று எப்படி தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்று எச்.ராஜா ஒரு பாடமே நடத்தி விட்டார்.

வருகிற 18-ந் தேதி மிக முக்கியமான தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இதில் சிவகங்கையில் போட்டியிடும் எச்.ராஜா தனது ட்விட்டரில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sivagangai Candidate H Raja Tweet about How to Vote

70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு

அதில், "வாக்கு இயந்திரத்தின் வரிசையில் 3வதாக உள்ள தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாஜக வேட்பாளர் H.ராஜா வாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்... வேண்டும் மோடி! மீண்டும் மோடி!! என்று பதிவிட்டுள்ளார்.

இதற்காக ஒரு டெமோ காட்டி உள்ளார். வாக்கு இயந்திரத்தில் மற்ற கட்சி பெயர், சின்னங்கள் மறைக்கப்பட, 3-ம் எண்ணில் H.ராஜா பெயர் மற்றும் அவரது போட்டோவுடன் தாமரை சின்னம் பளிச்செனெ தெரிகிறது. அதன் பக்கத்தில் உள்ள பட்டனை ஒரு விரலில் அமுக்கி வாக்களிப்பது போல அந்த படம் இருக்கிறது.

இந்த பதிவிற்கு கீழே ஏகப்பட்ட கமென்ட்கள் குவிந்து வருகின்றன. "என்ன அண்ணே இவ்வளவு தெளிவா சொல்லிட்டீங்க, தொகுதி வாக்காளர்கள் இப்போ கவனமாக "தாமரையை தவிர்ப்பார்கள்" என்று ஒரு பதிவு உள்ளது.

அதேபோல, "சிவகங்கை மக்களுக்கு புடிக்காத எண் 3"என்று மற்றொரு கமெண்ட் உள்ளது.

English summary
BJP Sivagangai Candidate H Raja Tweet and explains how to vote for BJP on 18th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X