சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்! சென்னையின் முதல் ஏசி தியேட்டருக்கு சொந்தக்காரர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன்- கமலா தம்பதிக்கு 4 குழந்தைகள். ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என 2 மகள்கள் உள்ளனர். இதில் சாந்தி மூத்தவர். இவர்தான் வீட்டில் முதல் பிள்ளை என்பதால் சிவாஜிக்கு சாந்தி மீது அதிக பாசம். அதனால்தான் சென்னை அண்ணாசாலையில் சிவாஜி கட்டிய தியேட்டருக்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார்.

Sivaji Ganesan

இந்த தியேட்டர் 1961 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜரால் திறக்கப்பட்டது. இந்த தியேட்டரின் பங்குதாரராக ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதியும் இருந்தார். ஏசி வசதி செய்யப்பட்ட சென்னையின் முதல் தியேட்டர் சாந்தி தியேட்டராகும்.

அது போல் தஞ்சையிலும் இரட்டை தியேட்டர்களை சிவாஜி கட்டினார். அதற்கு சாந்தி, கமலா (மனைவி) என பெயர் வைத்தார். சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்தை சாந்தி தயாரித்தார்.

சாந்திக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். இவரது கணவர் நாராயணசாமி, இவர்களுக்கு சத்தியலட்சுமி என்ற மகள் உள்ளார். அந்த திருமணத்தில் காமராஜர், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், சினிமா பிரபலங்கள், பாலிவுட் ஹீரோக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிவாஜியின் பூர்வீக வீட்டில்தான் சாந்தியும் தேன்மொழியும் வசித்து வந்தனர். தந்தையும் தாயும் இறந்த நிலையில் வீடு தொடர்பாக சகோதரர்களுடன் பிரச்சினை ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சாந்தி.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+