அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் கேட்ட புதிர் கேள்வி.. பதில் அளித்தால் பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 365 ரூபாய் மற்றும் 50 பைசா, நான் எஸ்எஸ்எல்சி முடிக்க செலவானது. இப்போது கார்த்தி பையனை பிரிகேஜி சேர்த்துவிடுவதற்கு 2.25 லட்சம் ரூபாய் கேட்குறாங்க என்ற நடிகர் சிவக்குமார் கூறினார். அகரம் அறக்கட்டளை சார்பில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் நிகழ்ச்சியில் சிவக்குமார் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

அகரம் அறக்கட்டளை சார்பில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடந்தது.

Sivakumar karthi Surya

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், கால் அரைக்காசுக்கு நாளரை கத்திரிக்காய், ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய் இந்த கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் பரிசு தருகிறேன். இந்த கேள்விகளை எல்லாம் 4ம் வகுப்பிலேயே கற்றுக்கொண்டேன். 6ம் வகுப்பு படிக்க போனது. 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு படிக்க மொத்தம் ரூ. 2.45 ஆனது. 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு படித்து முடிக்க ரூ.5.25 பீஸ் ஆகும்.

நான் வரும் போது தான் யோசனை செய்து பார்த்தேன்.. 365 ரூபாய் மற்றும் 50 பைசா, நான் எஸ்எஸ்எல்சி முடிக்க செலவானது. இப்போது கார்த்தி பையனை பிரிகேஜி சேர்த்துவிடுவதற்கு 2.25 லட்சம் ரூபாய் கேட்குறாங்க.. கற்பனை பண்ணி பாருங்க.. பைத்தியமே பிடிச்சிரும். 365 ரூபாய் 50 பைசாவில் படிப்பை நான் முடித்துவிட்டேன். அங்கு ஒரு கிளை மேக்ஸ் வந்தது. எஸ்எஸ்எல்சி படிக்கும் போது அம்மா, வழக்கம் போல் காடு கரையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5.25 ரூபாய் மாதம் பீஸ் கட்டியாச்சு. ஒரு வாரம் கழிச்சு நான் தலையை சொறிந்தேன்.. இது என்னடா இலவு என்று என் அம்மா கேட்டாங்க.. நான் பப்ளிக் எக்ஸாம் எழுதனும் அதற்காக இந்த கட்டணம் என்றேன். அப்போது என் தாய், உயிரையே எடுத்திடுவ நீ என்று சொல்லி, 11. 50 ரூபாய் உருட்டி பிரட்டி கொடுத்தாங்க..

பேங்க் எல்லாம் கிடையாது. சட்டிக்குள் மஞ்சள் துணியை சுற்றி வைத்திருப்பார். அந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். ஒரு வாரம் கழிச்சு போய் கையைக்கட்டிக் கொண்டு நின்றேன்.. இப்ப என்ன வேண்டும் என்று அம்மா கேட்டார். அதற்கு நான் 6, 7,8, 9, 10, 11ம் வகுப்பில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எல்லாரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுக்க வேண்டும் , அதற்கு காசு வேண்டும் என்றேன். அதற்கு அவர் கொன்றே போடுவேன் என்றார். இதனால் விட்டுவிட்டேன்..

அப்போது பள்ளியில் என்னோடு படித்த மாணவர்களுடன் குரூப் போட்டோ எடுத்த போது, நானும் சிலரும் அங்கு நிற்காமல் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அதற்கு ஆசிரியர் வாங்க.. என்னாச்சு என்று கேட்டார். அதற்கு பணம் இல்லை, நான் குரூப் போட்டோவில் நிற்கவில்லை என்றேன். அவர் பரவாயில்லை.. போட்டோவிற்கு நில் என்றார். ஆனால் நிற்க மறுத்து அப்படியே கிளம்பி சென்றுவிட்டேன். இன்று வரை எந்த குரூப் போட்டோ பார்த்தாலும் உறுத்தலாகவே எனக்கு இருக்கும். இன்று டிஜிட்டல் கேமரா வந்துவிட்டது. அன்று பிலிம் கேமரா தான் இருந்தது. 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இன்று கணக்கு போட்டு பார்த்தால் 5 கோடி பிரேமில் இந்த முகம் இருக்கிறது. " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+