சோனியாவின் கோபம்! அப்துல் கலாம் போட்டியிட வேண்டாம்னு சொன்னதே ப.சிதம்பரம்தான்! சிவதாணுபிள்ளை ஓபன்டாக்
சென்னை: குடியரசுத் தலைவராக மீண்டும் அப்துல் கலாம் போட்டியிட விரும்பினார். ஆனால் ப.சிதம்பரம் போன் செய்து, குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் அவர் போட்டியிட்டால் பெரிய பிரச்சினை எழும் என்பதால் கலாம் போட்டியிடவில்லை என சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: சோனியா காந்தி, சோமநாத் பட்டாச்சாரி ஆகிய இருவர் மட்டும் கூடுதல் பதவிகளை வகிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆதாயம் தரும் இரட்டை பதவி மசோதா (Office of profit) கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமின் ஒப்புதலுக்காக வந்தது. அப்போது இதை "நீங்கள் ஏற்கக் கூடாது" என நாங்கள் கலாமுக்கு கோரிக்கை வைத்தோம். "எந்த மசோதாவாக இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஓரிருவருக்கும் மட்டும் ஆதாயம் தரும் வகையில் இருக்கக் கூடாது" என நாங்கள் தெரிவித்தோம்.
மசோதா
இதை ஏற்ற கலாம், அந்த மசோதாவில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கலாமிடம் வந்து தனக்கு நெருக்கடி அதிகரிப்பதால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டார்.
நாடாளுமன்றம்
உடனே அப்துல் கலாம், நாடாளுமன்றத்தின் செயலாளருக்கு அப்துல் கலாம் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த மசோதா மீண்டும் ஆலோசிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவான மசோதாவாக திருத்தி கொண்டு வந்தால் நான் கையெழுத்திட தயார் என எழுதியிருந்தார்.
சோனியா காந்தி
அப்துல் கலாம் சொன்ன காரணம் சோனியா காந்திக்கு பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் அந்த மசோதாவை அச்சுபிழறாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வந்தது. ஒரு மசோதா இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டால், அவர் மறுக்காமல் அதில் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும்.
அப்துல் கலாம் கையெழுத்து
இதனால் அந்த மசோதா இருவருக்கு மட்டுமே பயனுள்ளதாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் அப்துல் கலாம் கையெழுத்திட்டார். கலாம் கையெழுத்திட்டிருந்தாலும் சோனியாவுக்கு அவர் மீதான கோபம் தீரவில்லை. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவரான கலாமின் பதவி காலம் முடிவுக்கு வந்தது.
குடியரசுத் தலைவர்
2007ஆம் ஆண்டு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வந்தது. அப்போது பெருவாரியான மக்கள் அப்துல் கலாமே மீண்டும் அந்த பதவியில் தொடர வேண்டும் என விரும்பி, நேரிலும், ஈமெயிலிலும் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனால் கலாமும் மீண்டும் குடியரசுத் தலைவராக தொடரலாம் என முடிவு செய்திருந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ்
பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் எல்லாம் கலாமுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் கலாம் மீண்டும் அந்த பதவியில் தொடர காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. கலாமை சந்தித்த பாஜகவினர், குடியரசுத் தலைவர் பதவியில் தொடருமாறு கேட்டனர்.
மன்மோகன் சிங் சொன்னது என்ன
அதற்கு கலாம், உங்களை (பாஜக) போல் காங்கிரஸும் எனக்கு ஆதரவாக இருந்தால் நான் நிச்சயம் தொடர்கிறேன் என்றார். இதையடுத்து மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்ட கலாம், "எனக்கு ஒருமித்த ஆதரவு கொடுத்தால் நானே இந்த பதவியில் தொடர்கிறேன்" என்றார்.
இரு ஆப்ஷன்
அதற்கு மன்மோகன் சிங், நீங்கள் இந்த பதவியிலேயே தொடர்வதை காங்கிரஸ் கட்சியின் தலைமை விரும்பவில்லை என சொல்லிவிட்டார். இதனால் கலாமுக்கு இரு ஆப்ஷன்தான் இருந்தது , ஒன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவளிக்காவிட்டாலும் போட்டியிடுவது, இல்லாவிட்டால் போட்டியிடாமல் விடுவது ஆகியவைதான்.
பிரதீபா பாட்டீல்
இந்த நிலையில் பிரதீபா பாட்டீல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு குடியரசுத் தலைவரானார். இவரது பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வந்தது. அப்போதும் அத்வானி, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் கலாமை சந்தித்து அவரை அந்த தேர்தலில் போட்டியிட சொன்னார்கள்.
கருணாநிதியிடம் ஆதரவு
கலாமோ எல்லாருக்கும் ஆதரித்தால் போட்டியிடுகிறேன் என்றார். அப்போதும் காங்கிரஸ், கலாமுக்கு ஆதரவளிக்காமல் பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கினர். அப்போது கலாமுக்கு ஆதரவளிக்குமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கேட்டோம். ஆனால் காங்கிரஸ் சார்பிலோ கூட்டணி சார்பிலோ யாருமே ஆதரவு தரவில்லை. வேண்டுமானால் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடட்டும் என எல்லாரும் சொன்னார்கள்.
கலாம் போட்டியிட தயார்
இதனால் கலாமும் போட்டியிடலாம் என நினைத்திருந்தார். ஆனால் இந்த தகவல் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு சென்றது. அவர் எனக்கு போன் செய்து, "ஜனாதிபதி தேர்தலில் கலாம் போட்டியிட போகிறார் என செய்திகள் வருகின்றன. அவரை போட்டியிட வேண்டாம் என சொல்லுங்கள். அது தவறு, மீறி போட்டியிட்டால் அது பெரிய பிரச்சினையாகிவிடும். எனவே கலாமுக்கு அறிவுரை வழங்குங்கள். " என என்னிடம் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
எதற்கு பிரச்சினை
உடனே " நீங்கள்தான் (ப.சிதம்பரம்) போட்டியிட வேண்டாம் என சொன்னதாக சொல்லட்டுமா" என கேட்டேன். அதற்கு அவரும் சரி என்றார். இந்த விஷயத்தை கலாமிடம் சொன்ன போது , "எதற்காக பிரச்சினை" என நினைத்து அவர் போட்டியிடாமல் விட்டுவிட்டார்.
சிங்கப்பூரில் கொண்டாட்டம்
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நல்ல குடியரசுத் தலைவர் வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு. எல்லாருக்கும் பிடித்தமான, பொதுவான குடியரசுத் தலைவராக இருந்தார். அதனால் அவர் மீது உலகளவில் மரியாதையும் மதிப்பும் இருந்தது. சிங்கப்பூரில் உலக அறிவியல் தினம் என வைத்து கலாமை கொண்டாடினார்கள். ஆனால் நாம் அவரை ஏன் மதிக்கவில்லை. அரசியல் தலைவர்கள் கலாமை குறுகிய நோக்கத்துடன் பார்த்தார்களே தவிர பெரும்பான்மை நோக்கத்துடன் பார்க்கவில்லை. இவ்வாறு சிவதாணு பிள்ளை வேதனை தெரிவித்தார்.
இரட்டை ஆதாயம்
Office of profit என்றால் ஆதாயம் தரும் இரட்டை பதவி என அர்த்தம். அதாவது மத்திய அரசிடம் இருந்து ஊதியம் பெறும் எம்பிக்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் அரசியல் சாசன சட்டப்பிரிவின் கீழ் அரசு பதவியை வகிக்க முடியாது என்பதாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications