விஜயின் 6 இலவச சிலிண்டர்கள் வாக்குறுதி.. முதல் பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படவில்லை
சென்னை: தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. தவெக அறிவித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. குறிப்பாக, வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம் என்று அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி தொடர்பாக அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

தவெக பட்ஜெட் தாக்கல்
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றம் கூடியது. அதனை தொடர்ந்து நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். நாளை வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வருடத்திற்கு 6 சிலிண்டர்கள்
ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு அல்லது அதற்கான நிதி ஒதுக்கீடு முதல் முழுமையான பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்திருந்தது. ஆனால், அதுதொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாதது பொதுமக்களிடேயை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
