படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள்.. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் நடக்கும் சூப்பர் விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகலில் இருக்கை வசதியுடன் செல்லும் வந்தே பாரத் ரயில்களுக்கு நாட்டில் வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒரே மாநிலம் அல்லது இரண்டு அல்லது 3 மாநிலங்களுக்கு கூட செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் எல்லாமே ஒரே நாளில் ஒரு ஊரில் இருந்து புறப்பட்டு, இன்னொரு ஊருக்கு சென்று, அன்று இரவே புறப்பட்டே ஊருக்கு வருகின்றன. இதற்கு வரவேற்பு அதிகமானதால், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் படுக்கை வசதி கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே 90-க்கும் மேற்படட் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் எல்லாமே இருக்கை வசதிகொண்டவை (சேர் கார்) ஆகும். ஏ.சி. வசதி, பயோ கழிப்பறை, தானியங்கி கதவு, நவீன பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா உள்பட பல்வேறு வசதிகளுடன் இருக்கிறது. மிக விரைவாக சென்று வருவது, ஒரே நாளில் சென்று வருவது போன்ற காரணங்களால் வரவேற்பு அதிகமாக உள்ளது.

Sleeper-class Vande Bharat trains A great development at the Chennai ICF factory

எனினும் இந்த வகை ரயில்கள் பகலில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதே போன்று இரவு நேரங்களில் நீண்ட தூரம் இயக்குவதற்கு ஏற்ற வகையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல். (பெமல்) மற்றும் பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப். ஆகியவை ஒருங்கிணைந்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 10 வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், முதல் ரயில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எஞ்சிய ரயில்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

பெங்களூரு, சென்னை போன்ற இரு நகரங்களில் உள்ள தொழிற்சாலை ஒருங்கிணைப்பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் பணிகள் முடிவடைந்த பின்னர், ஐ.சி.எஃப். தொழிற்சாலை மூலம் மேலும் பல படுக்கை வசதி வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்திருக்கிறது.

இது குறித்து, ஐ.சி.எஃப்., அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐ.சி.எஃப். மற்றும் பி.இ.எம்.எல். ஒருங்கிணைப்பில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகள் கொண்டவையாகும். முதல் ரெயில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எஞ்சிய ரெயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் படுக்கை வசதி கொண்ட 50 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஐ.சி.எஃப்.பில் தயாரிக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் பல்வேறு மாற்றங்களுடன், 24 பெட்டிகள் கொண்டதாக தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+