Chennai Rains: நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச... வா மழையே... சென்னை மக்கள் ஏக்கம்
Recommended Video
சென்னை: இந்தா இருக்கு பக்கத்து ஊரு, மழை அப்படி அடிக்குது தலைநகர் சென்னையில், காற்று தான் வருது, மழையைக் காணோம் என்பது தான் சென்னைவாசிகளின் பலரின் புலம்பலாக உள்ளது.
மழை இல்லாததால், வெயிலின் தாக்கம் பெரும்பாலான மக்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறது. அதே நேரம், குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது. மினரல் வாட்டர் கேன்களின் விற்பனையும் சூடுபறக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

தண்ணீர்.. தண்ணீர்
தண்ணீர் தட்டுப்பாட்டால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். பலர், வீடுகளை காலி செய்து விட்டு ஓரளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடிய, ஏரியாக்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் பல அடிக்கு கீழ் சென்றுவிட்டன. அவ்வாறு கிடைக்கும் தண்ணீரும் கடலில் இருந்து நேரடி இணைப்பு போல் உள்ளது. தண்ணீரைத் தேடி அலையும் நிலை வெகுநாட்களில் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், தண்ணீர்... தண்ணீர் என இயற்கை புலம்ப வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

திருவள்ளூரில் மழை
இதற்கிடையே, திருவள்ளூர் அருகே மணவாள நகர், ஒண்டிகுப்பம், புட்லூர் சுற்றுவட்டாரங்களில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், சென்னை திருப்பதி செல்லும் சாலையில் குறுக்கே மின் கம்பம் விழுந்ததால் மாற்றுப்பாதையில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றன.

உள்மாவட்டங்களில் மழை
செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் மரக் கிளைகள் ஒடிந்து தொங்கியதால் அவ்வழியாக செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதே போல், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னை மக்கள் ஏக்கம்
இதற்கிடையே, தமிழகத்தில் அனல் காற்று சற்று குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை வரவேண்டும், மக்கள் மனம் குளிர வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் ஏக்கமாக உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications