உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
சென்னை: ஸ்மோக் பிஸ்கட் என்று சொல்லப்படும் உணவு தடை செய்யப்பட உள்ளதா என்பது பற்றி உணவுப் பாதுகாப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
சில மாதங்கள் முன்னதாக தமிழ்நாட்டில் ஆரஞ்சு கலர் பஞ்சு மிட்டாய் தடை செய்யப்பட்டது. அதில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நஞ்சு கலந்துள்ளதால் அதைப் புதுச்சேரி அரசு தடை செய்தது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்குத் தடை விதித்தது. இப்போது அதேபோல ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது ஸ்மோக் பிஸ்கட்.
சில நாட்கள் முன்னதாக ஹைதராபாத் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட உடன் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதனைத் தொடர்ந்து பலரும் ஸ்மோக் பிஸ்கட் பற்றிய எதிர்மறையான கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். பல பெற்றோர்கள் வீடியோவை பார்த்து பயத்தில் உறைந்து போயினர்.

இந்நிலையில் சென்னையில் விற்பனையாகும் ஸ்மோக் பிஸ்கட் உட்படப் பல உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
திரவ நைட்ரஜன் பாதிப்புகள் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் சதீஷ்குமார் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்.
அவர், பேசியதாவது "நேற்று ஹைதராபாத்தில் ஒருசிறுவன் திரவ நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்டுவிட்டுத் துடிதுடித்த வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்தச் சிறுவன் இறந்து போனதாகவும் செய்தி கிடைத்துள்ளது.
உடனடியாக உணவுப் பாதுகாப்பு ஆணையத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதை நாங்கள் பெற்றோம். அதில் திரவ நைட்ரஜனை எந்த உணவுப் பொருட்களில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி இருந்தார்கள்.
ஆகவே அந்த உத்தரவை ஏற்று நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். நாங்கள் விசாரணை நடத்தியதில் நிறைய மதுபான விடுதிகள், ரெஸ்டாரண்ட்ஸ், பார்ட்டி ஹால் போன்ற இடங்களில் இந்த திரவ நைட்ரஜன் திரவம் கலந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதை அறிந்தோம். அதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

இந்தத் திரவ நைட்ரஜன் என்பது மைனஸ்196 டிகிரியில் உள்ள பொருள் அது. அதை அறையில் எடுத்து வைத்தால், உடனே அது அறையின் வெப்பநிலைக்கு மாறுவதற்காகப் புகை போல் வெளியேறும்.
இந்த மைனஸ்196 டிகிரியில் உள்ள ஐஸ் ஆனது நமது உடலில் எங்குப் பட்டாலுமே அந்தப் பாகம் அப்படியே கருகிவிடும். அந்தளவுக்கு ஆபத்தானது. உணவைப் பதப்படுத்தவும்,

உணவைக் கெடாமல் உறைய வைப்பதற்கும் அதைப் பயன்படுத்துவோம். இதைப் போன்ற தேவைக்கு மட்டுமே திரவ ஹைட்ரன் பயன்படுத்த வேண்டும். அதையே உணவாக எடுப்பது மிகமிக ஆபத்தானது.
மீறி அதை எடுத்தால் அது வயிற்றுக்குள் செல்லும் போது குடலில் ஓட்டை விழுந்துவிடும். அது எங்கு எல்லாம் படுகிறதோ அங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும்.
வெளிநாடுகளுக்குக் கறி, மீன், இறால் போன்றவற்றைப் பதப்படுத்தி அனுப்பும் போது அதன் அடியில் இந்த ஐஸ் நைட்ரஜனை வைப்போம். அது சரியான பதத்தில் உணவைக் கெடாமல் இருக்க உதவி செய்யும். அதைப் போய் உண்டால் என்ன ஆகும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

ஆகவே உயிருக்கே கேடு விளைவிக்கும் இதை யாரும் உண்ண வேண்டாம். குழந்தைகள் அதன் தாக்கத்தைத் தாங்கமாட்டார்கள். அவர்களுக்கும் வாங்கி தர வேண்டாம்.
நாங்கள் இதற்கான தரவுகளைச் சேகரித்து வருகிறோம். தடை செய்வது தேவையா? இல்லையா என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications