Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த காமெடி.. கீமிடி எல்லாம் எங்க தலைவர் கிட்ட வேண்டாம்.. செல்லூர் ராஜூவை விளாசிய சினேகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவெக தலைவர் விஜய் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். கமல் குறித்த விமர்சனம் மநீம தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லூர் ராஜூவுக்கு பதிலளித்துள்ள சினேகன், காமெடி செய்வதற்கும், அறிவில்லாமல் பேசுவதற்கும் இங்கு நிறைய அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களிடம் சண்டை போடுங்கள் என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கவிஞரும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான சினேகன் வெளியிட்டுள்ள வீடியோவில், "செல்லூர் ராஜூ அண்ணன். என்ன பேசுகிறோம். யாரை பேசுகிறோம் என்கிற நிதானம் இருக்கிறதா உங்களுக்கு. உங்களை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. எப்போதுமே அரசியல் காமெடியனாக இருந்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள்.

snehan-slams-sellur-raju-for-his-remarks-on-kamal-haasan

உளறி கொட்ட கூடாது

ஊடகங்கள் உங்களை நோக்கி ஒலி வாங்கி நீட்டுவது நீங்கள் உலக அரசியல் பேசுவீர்கள் என்பதற்காக அல்ல. ஏதாவது உளறி கொட்டுவீர்கள். அன்றைக்கு பொழுது போக்காக இருக்கும் என்பதற்காக தான். நீங்கள் உடனே உங்களை அறிவாளியாக நினைத்து கொள்ளாதீர்கள். உங்களின் அறிவாளித்தனம் உலகத்திற்கே தெரியும். தர்மாகோல் சாதனையை முறியடிக்க முடியாமல் உலகமே திணறிக் கொண்டிருக்கிறது.

நாம் இன்னொருவரை கிண்டல் செய்யலாமா. ஒருவரை விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி கொட்ட கூடாது. எடப்பாடி உங்களை இடையிலேயே கழற்றிவிட்டு சென்றது நினைவில் இருக்கிறதா. அதன் பிறகு எதையாவது பேசி நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்கிறீர்களா.

கோபம் வர மாதிரி காமெடி பண்ண கூடாது

அதற்கு எங்கள் தலைவர் தான் கிடைத்தாரா. உங்களை போல காமெடி செய்வதற்கும், அறிவில்லாமல் பேசுவதற்கும் இங்கு நிறைய அரசியல்வாதிகள் உள்ளனர். ஒரு அறிவார்ந்த தலைவரை ஆழ்ந்து.. உணர்ந்து நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். படம் எடுக்க காசு கொடுத்தால் அமைதியாகிவிடுவார் என்று சொல்கிறீர்கள். அவர் எடுத்த படங்கள் எல்லாமே அவராக கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் எடுத்தது.

இன்றைக்கு உலகத்தின் தலை சிறந்த படங்களின் பட்டியல் போட்டால் அதில் எங்கள் தலைவரின் படமும் இடம்பெறும். இன்றைக்கு சினிமாவைப் பற்றியோ, கலையை பற்றியோ ஆய்வு செய்ய வேண்டுமென்றால் எங்கள் தலைவரை தாண்டிதான் செல்ல வேண்டும். ஆளுமை மிக்க ஒரு தலைவர். எங்கள் சுயநலத்திற்காக நாங்கள் கூட்டணியில் இல்லை. தமிழகம் அழகான ஒரு மாநிலம்.

பாஜகவிடம் மண்டியிடவில்லை

மக்களுக்கான அரசியலை கொடுக்க வேண்டும், ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது, மாநிலத்தை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் கூட்டணி அமைத்துள்ளோம். உங்களை போல மக்களை ஏமாற்றி சேர்த்த சொத்தை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பற்காக பாஜகவிடம் மண்டியிட்டு நிற்கவில்லை. நோட்டுக்காக விலை போபவர் எங்கள் தலைவர் இல்லை.

விஸ்வரூபம் பட பிரச்சனையில் ஏன் உங்கள் அம்மாவே விலை பேசினார்கள் இல்லையா. வாங்க முடிந்ததா. அப்போது கூட சட்டப்படி நீதி வாங்கி வெற்றி பெற்றார். அவரைப் பற்றி எல்லாம் பேசாதீர்கள். அதற்கு எல்லாம் ஒரு தகுதி வேண்டும். அதுவும் கால்களை பார்த்தே பம்மி பம்மி.. நகர்ந்தவர்களுக்கு ஆகாயத்தை அன்னாந்து பார்க்க நேரமில்லை. எங்கள் தலைவர் ஆகாயம். உங்கள் கேட்டகிரிக்கு இங்கு நிறைய தலைவர்கள் உள்ளனர். அவர்களுடன் சண்டை போட்டு விளையாடுங்கள்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+