பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்.. ஆறுதல் அளிக்கும் தமிழக கொரோனா புள்ளி விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் என்னதான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதை விட அதிகமாகி கொண்டே இருப்பது மனதிற்கு ஆறுதலை தருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் 2500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் சொல்வது ஒன்றுதான். கொரோனா பாதிப்பு அதிகரிப்பை விடுங்கள். குணமடைந்தோரின் எண்ணிக்கையையும், இறப்பு சதவீதத்தையும் பாருங்கள் என்பார்கள்.

கொரோனா

கொரோனா

அதாவது அவர்கள் கூறிய இரு விஷயங்கள்தான் தமிழகத்தில் கொரோனா எந்தளவுக்கு தீவிரமாகியுள்ளது என்பதை அறிய உதவுவது ஆகும். அந்த வகையில் இன்றைய தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3509 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 70,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுதல் செய்தி

ஆறுதல் செய்தி

ஆனால் கிட்டதட்ட 40,000 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது பாதிப்பு எண்ணிக்கை 3500 ஆக இருந்தாலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

குணமடைந்தவர்கள்

குணமடைந்தவர்கள்

சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

பாதிப்பு

பாதிப்பு

சுகாதாரப் பணியாளர்கள், உள்ளிட்டோர் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். பொதுமக்களை போல் தினமும் மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பும் கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசின் போராலும் விரைவில் தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+