கடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு
சென்னை: தேர்தல் முடியும் நேரத்தில் சென்னை எம்கேபி நகர் விவேகனாந்தா பள்ளியில் ஏராளமான மக்கள் வாக்களிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை எம்கேபி நகர் விவேகானந்தா பள்ளியில், வடசென்னை மக்களவை, பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வியாசர்பாடி பகுதியில் இருக்கும் ஜேஜே நகர், சத்யமூர்த்தி நகர் மக்கள் இந்த விவேகானந்தா பள்ளியில் தான் வாக்களித்து வருகிறார்கள்.

காலை முதலே வாக்குப்பதிவு இங்கு மந்தமாக இருந்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டுவந்து வாக்களிக்க குவிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். வாக்குச்சாவடியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் கூடிய மக்களை கட்டுப்படுத்தி, நிற்க வைக்கும் பணியினை மேற்கொள்ள போதிய காவலர்கள் இல்லாமல் திணறினர். இதனிடையே தேர்தல் அலுவலர்கள் மக்களிடம் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அமைதியாக வரிசையில் நிற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
வந்திருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் மாலை 6 மணிக்கு மேல் ஆனாலும் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். காலையில் இருந்து எட்டிப்பார்க்காமல் இருந்த மக்கள் திடீரென கடைசி நேரத்தில் மொத்தமாக வாக்களிக்க குவிந்ததால் எம்கேபி நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications