மகாளய அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா? பரிகாரம் யாருக்கு?
சென்னை: கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி மகாளய அமாவாசை தினத்தில் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா? யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது.

சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு மறைத்து விளிம்பில் வளையம் போல ஒளி தெரிகிறபோது, அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலையில், இரண்டாவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமானது புரட்டாசி மாத அமாவாசை அன்று நிகழ உள்ளது. அதாவது கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது, சித்திரை நட்சத்திரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
அமாவாசை நாளில் சூரிய கிரகணமும், பௌர்ணமி நாளில் சந்திர கிரகணமும் நிகழும். எல்லா அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கிரகணங்கள் நிகழாது.
ராகு கேது எதிர் எதிரே அமர்ந்திருக்க சூரியன் சந்திரன் ஒன்றாக இணைந்து ராகு உடனோ, கேது உடனோ இணைந்தால் கிரகணங்கள் தோன்றும். வரும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்ய சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் கன்னி ராசியில் இணைகிறார். அன்றைய தினம் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
இந்த கிரகணம் பற்றி பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 27ஆம் தேதி அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.34 மணி முதல் அதிகாலை 02.25 மணி வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக பகல் நேரங்களில் வரும் சூரிய கிரகணம் மட்டுமே இந்தியாவில் தெரியும். இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நிகழுவதால் இது இந்தியாவில் தெரிய வாய்ப்பு இல்லை.
இந்த சூரிய கிரகணத்திற்கு கங்கனகிருதி சூரியகிரகணம் என்று பெயர். கங்கனகிருதி சூரியகிரகணம் தெற்கு மத்திய அமெரிக்கா பகுதிகள், வடஅமெரிக்கா, கனடா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, கொலம்பியா, க்யூபா, பெரு, உருகுவே, வெனின்சுலா, ஜமைக்கா, பிரேசில், பராகுவே, பஹாமாஸ், டோமினிகா உள்ளிட்ட நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும் என சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 14ஆம் தேதி நிகழ உள்ளது. இந்தியாவில் தெரியாது என்பதால் இங்குள்ளவர்கள் பரிகாரம் செய்யத் தேவையில்லை. அதே நேரத்தில் சூரிய கிரகணம் தெரியும் நாடுகளில் வசிக்கும் கன்னி ராசிக்காரர்கள், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவக்ள் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம்.
அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை இரவு 01.03 முதல் இரவு 02.24 வரை ஐப்பசி 11ஆம் தேதி அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் பகுதி நேர சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேவதி, அஸ்வினி, மகம், மூலம், ஆகிய நட்சத்திரங்கள் கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 09.12 மணிக்கு நிகழ உள்ள சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. வட அமெரிக்கா, கனடா,நார்வே,ஐஸ்லாந்து,பிரிட்டன், ஸ்பெயின்,போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இந்த முழு சூரிய கிரகணம் தெரியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications