Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் 78000 மானியம்: சேரப்போறீங்களா.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தில் மத்திய அரசு தரும் 78000 தரும் மானியம் குறித்த சூரிய மின்உற்பத்தி குறித்த நிபுணரான பாலு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த திட்டத்தின்படி வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

 Solar power generation expert Balu explain about Benefits of PM Surya Ghar Yojana 2024

தற்போது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசு மானியம் தருவதால் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துகின்றன. இந்த நிலையில் தான் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில், வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சோலார் மின் உற்பத்தி குறித்த நிபுணரான பாலு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இரண்டு மூன்று நாளாக நம்ம மக்கள் சோலார் மானியம் 78000 சம்மந்தமாக பலர் கோரிக்கை வைத்தார்கள். உடனே பதில் சொல்ல முடியவில்லை.. நடுவன் அரசின் 78k மானியம் 3kwல இருந்து 10kw வரைக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.1kw 2kw ல பெரிய லெவலில் நமக்கு பயன் இல்லை.

3kw க்கு ஆவ்ரேஜாக மாசம் 350யூனிட் கிடைக்கும் இதுக்கு பல கம்பெனிகள் 1.20 லட்சம் ரூபாயில் இருந்து 1.30 லட்சம் வரைக்கும் கொடுக்கிறார்கள். இதில் முக்கியமாக DCR பேனல் & இந்தியால தயாராகிற சோலார் இன்வெட்டர்க்கு தான் மானியம் கிடைக்கும். Non DCR பேனல்க்கு மானியம் இல்லை , non dcr பேனல்ல வெளிநாட்டு செல் யூஸ் பண்றாங்க , dcr பேனல்ல இந்தியால தயாரிக்கிற செல் யூஸ் பண்ணுவாங்க..

முக்கியமாக நம்ம கவனிக்க வேண்டியது மானியம்னு நீங்க ஒரு கம்பெனிய கேக்கும் போது அவர்கள் 3kw க்கு உண்டான செட்டப் (பொக்கே) க்கு ஆன ரேட் கொடுப்பாங்க. உதாரணமாக 1.130 லட்சம் என்று வைங்க.. அதுல பேனல் மாட்டும் ஸ்டச்சர் ஸ்டேன்டேடு, டிசி கேபிள், ஏசி கேபிள்னு ஒரு ஸ்டேண்டேடு அளவு தான் இருக்கும்.. இதுல உங்க ஏரியா மின்வாரிய அலுவகத்தில் விண்ணப்பித்தால், அவர்கள் உங்கள் வீட்டுக்கு 3kw சோலார் பேனல் மாட்டலாம்னு சொன்ன பின்பு EBயோட ரூல்ஸ்க்காக அந்த கம்பெனி இன்ஸ்ட்டால் செஞ்ச பின்னாடி EB சைடு இன்ஸ்பெக்சன் முடிச்சுட்டு பைரக்சன் மீட்டர்க்கு பணம் கட்ட சொல்லிட்டு, உங்களோட ஆதார் மற்றும் பேங்க் அக்கவுண்ட் நபம்பர் மற்றும் மானியத்தை போர்ட்ல அப்டேட் செஞ்சுடுவாங்க..

அதற்கு பின்பு உங்க அக்கவுண்ட்க்கு மத்திய அரசு தரும் 78000 மானியம் வரும்..உங்களுக்கு சோலார் பேனல் மாட்டி கொடுக்கும் கம்பெனிக்கும் உங்களுக்கு வரவேண்டிய மானியத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை . நேரடியாக மத்திய அரசு கொடுக்கும் மானியம் உங்களை வந்து அடையும், உங்கள் வீட்டில் மாட்டும் சோலார் பிளாண்ட்க்கு நீங்களே முழு தொகையும் கொடுத்த செட்டில் செய்து கொள்கிறீர்கள்.. இதில் கவனிக்க வேண்டியது நீங்கள் கொட்டேசன் வாங்கும் கம்பெனி என்ன வாட்டேஜ் பேனல் கொடுக்கிறார்கள் என்றால், அப்போது340w இல்ல 400w இல்ல 540w பேனலா என்று கவனிக்க வேண்டும்.

உங்களுடைய வீட்ல இருக்க இடம், அதற்கு ஏற்ற மாதிரி அப்டேட் பேனல்கள் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்களா என்று பார்க்க வேண்டும். மெக்ரான் வாட்டேஜ் பேனல்களை போட்டு இடத்தை கெடுத்து விடக்கூடாது, அடுத்து உங்க இடத்துல என்ன மாதிரி ஹைட்ல ஸ்டச்சர் இருக்கனும்னு உங்களோட எதிர்கால ஐடியாவை கேட்டு பேனல் மாட்ற ஸ்டச்சர் இருக்க வேண்டும்.

முக்கியமான எர்த் ராடு என்ன மாதிரி யூஸ் பண்றாங்கனு நீங்க தெரிஞ்சுக்க வேண்டும். அடுத்து சோலார் இன்வெட்டர் என்ன மாதிரியான வாரண்டி கொடுக்காங்க அதுவும் கம்பெனி ரீபிளேஸ்மெண்ட் வாரண்டியா இல்ல சர்வீஸ் வாரண்டியானு தெரிஞ்சுக்க வேண்டும். மத்திய அரசு மானியம் மட்டுமே கொடுக்கும்.

நீங்க செலக்ட் பண்ற கம்பெனி மத்திய அரசின் மானிய போர்ட்டலில் இருக்கும். அப்படி அவுங்க சர்வீஸ் பிரச்சனைனா ஸ்பேர்ஸ்க்கு உண்டான பணத்த கம்பெனியோட அக்கவுண்ட்ல இருந்து எடுத்து உங்களுக்கு வர்ற மாதிரி தான் இருக்கிறது. ஆகவே பொருள் அவுங்க கொடுப்பதை விட நீங்களாக ரிபிளேஸ்மெண்ட் வாரண்டி உள்ள இந்திய தயாரிப்பு சோலார் ட்ரைவ் செலக்ட் பண்ணசொல்லுங்க மிக முக்கியமாக எந்த (மானிய போர்டலில்) கம்பெனியை அணுகினாலும், உங்கள் வீட்டை ஒரு முறை பார்த்து அவர்களிடம் உங்களுக்கான சந்தேகங்களை கேட்டு அதற்கு பின்பு முடிவு எடுங்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+