சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கு வாய்ப்பு.. சிலருக்கு மறுப்பு... 3 அமைச்சர்களுக்கு "அல்வா"!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், அமைச்சர் வளர்மதி மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் நிலோபர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போதைய அமைச்சர்களில் 30 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

some AIADMK MLAs denied opportunity and also 3 ministers

தமிழக சட்டசபை தேர்தல் களம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் பணிகளில் கட்சிகள் மிக வேகமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவில் 171 வேட்பாளர்களுக்கான 2-ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளும், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளும் வெளியிடப்பட்டன.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 14 பேர் பெண்கள் உள்ளனர். தற்போதைய அமைச்சர்களில் 30 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், அமைச்சர் வளர்மதி மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் நிலோபர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கவுதமி கடும் ஏமாற்றம்.. பாஜக அழுத்தத்திற்கு அசராத அதிமுக.. ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி கவுதமி கடும் ஏமாற்றம்.. பாஜக அழுத்தத்திற்கு அசராத அதிமுக.. ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பிரபுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரங்கரை மனோரஞ்சிதம், பர்கூர் ராஜேந்திரன், கெங்கவல்லி மருதமுத்து ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பில்லை என்று அதிமுக தலைமை கூறிவிட்டது.

English summary
In the AIADMK, Kadar Rural Industries Minister Baskaran, Minister for Development and Labor and Employment Minister Nilofar did not get a chance again
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X