காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.. சென்னை மக்களே கவனம்.. உங்க ஏரியா இருக்கா? பாருங்க
சென்னை: மின்வாரியம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக சென்னையில் கும்மிடிப்பூண்டி, திருமுல்லைவாயல் உள்பட மேலும் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறும்போது முறையாக அறிவிப்பு வெளியிட்டு மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் இன்று சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக டேன்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 13.09.20024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நாப்பாளையம்: மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐஜே புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள் முருகன் நகர், வெள்ளி வயல், நாபாளையம், இடையான் சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்ஆர்எப் நகர், சுப்ரமணி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
எஸ்ஆர்எம்சி: ஐயப்பன் தாங்கல், ஆர்ஆர் நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம், போரூர் கார்டன் முதல் மற்றும் இரண்டாம் கட்டம், ராமசாமி நகர், அர்பன் ட்ரீ, ஆற்காடு சாலையின் ஒரு பகுதியில் உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' ஏற்படும்.
அதேபோல் எம்எம்எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரத்தின் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சரேி, மதுரம் நகர், தெள்ளியாரகரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் விநியோகம் என்பது இருக்காது.
திருமுல்லைவாயல் - கும்மிடிப்பூண்டி: திருமுல்லைவாயலை பொறுத்தவரை செந்தில் நகர், காளிகாம்பாள் நகர், அர்ஜுனா நகர், ஸ்ரீநகர் காலனி, சீனிவாச நகர் (சோளம்பேடு சாலை) உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியை எடுத்து கொண்டால் உயரழுத்த நுகர்வோர் கனிஷ்க், அருண் ஸ்மெல்டர்ஸ், செஞ்சுரி ப்ளைவுட் மற்றும் மிட்சுபா, எளாவூர் பஜார், சுண்ணாம்புக் குளம், பெத்திக்குப்பம், கயிலார்மேடு, ஆர்மபாக்கம் பஜார், நொச்சிக்குப்பம், ஏகுமதுரை, எடுர் கும்பிளி, தொக்கமூர், தண்டம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications