சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் சில முக்கிய ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் சில முக்கிய ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூர் செல்லும் சில ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்- சென்னை எழும்பூர் இடையிலான கோடைக்கால சிறப்பு ரயில் (வண்டி எண்-08577) 17-ந்தேதியில் இருந்தும், சென்னை எழும்பூர்-விசாகப்பட்டினம் இடையிலான ரயில் (08578) 18-ந்தேதியில் இருந்தும் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06065) 16-ந்தேதியில் இருந்தும், தன்பாத்தில் இருந்து தாம்பரம் வரும் ரயில் (06066) 19-ந்தேதியில் இருந்தும் ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் சிறப்பு ரயில் (06079) 18-ந்தேதியில் இருந்தும், சந்திரகாச்சியில் இருந்து எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06080) 19-ந்தேதியில் இருந்தும் ரத்துசெய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடக மாநிலம் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெங்களூர் கண்டோன்மென்டில் நிற்காது.
அதன்படி, பெங்களூர்வில் இருந்து சென்னை சென்டிரல் வரும் லால்பாக், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி-எண்-12608, 22626, 12658) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.
அதே தேதிகளில், சென்னை சென்டிரலில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன், லால்பாக், சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் (22625, 12639, 12607, 12027) பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது. கன்னியாகுமரி-பெங்களூர், தூத்துக்குடி-மைசூரு, சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16525, 16235, 12657) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.
அதே போல, பெங்களூர்-கன்னியாகுமரி, மைசூரு-தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது. மைசூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022), சென்டிரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16021) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications