திடீரென சத்தம்.. அலறிய பயணிகள்! காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை: திருவொற்றியூர் அருகே சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் வரை தினசரி இயங்குகிறது காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில். இந்த ரயில், நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. எண்ணூரைத் தாண்டி , திருவொற்றியூர் அருகே சென்றபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். இந்த பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில், செண்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள், ரயிலை ஆய்வு செய்தனர்.
7 ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications