Exclusive: பிரைவேட்டாக போட்ட வீடியோ.. வரதராஜன் விளக்கம்.. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதில்
சென்னை: பிரைவேட்டாக போட்ட வீடியோ தவறாக பரவி உள்ளது. நான் சொன்ன விஷயம் மிகைப்படுத்தப்பட்டு வதந்தியாக பரப்பப்பட்டுள்ளது என்று மூத்த செய்தி வாசிப்பாளர் வரதராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மூத்த செய்தி வாசிப்பாளர் வரதராஜன் பேஸ்புக்கில் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. அவரிடம் என்ன நடந்தது என்பது குறித்து 'ஒன் இந்தியா" அவரிடம் கேட்டது.
அதற்கு வரதராஜன் அளித்த விளக்கத்தில், நான் பேஸ்புக்கில் அந்த வீடியோவை போடவில்லை. நாடக்குழு நண்பர்களுக்காக போட்டது. என்னுடைய பேஸ்புக் போஸ்டில் அது இருக்கவே இருக்காது. என்னுடைய நாடக்குழு நண்பர்களுக்காக வார்னிங் கூறும் விதமாக போட்டேன். வெளியில் சுற்றுகிறீர்கள். ஜாக்கிரத்தையாக இருங்கள். சமூக அக்கறையை எடுத்துக்கொள்ள மாட்டீங்கிறீங்க. சமூக இடைவெளி இல்லை. நிறைய பிரச்னை உள்ளது.

கவனமாக இருங்கள்
இப்போதெல்லாம் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால், மருத்துவமனையில் அட்மிட் ஆவது பிரச்சனையாக உள்ளது. ரெம்ப கவனமாக இருங்க என்று அவங்களுக்ககாக போட்ட வீடியோ மெசேஜ் இது. அதுல நீங்க முழு மெசேஜை பாருங்க. கடைசியில நான் பேசினது பாருங்க. அதுல உங்களுக்கெல்லாம் நாடகமே இல்லை என்ற வெறுமை இருக்கலாம். கால் பண்ணி சந்தோஷமாக எண்ணங்களை பகிர்ந்துப்போம். ரிஸ்க் எடுத்துக்காதீங்க என்று ஒரு விழிப்புணர்வுக்காக போட்டது. அது எங்கிருந்து சோசியலில் வைரலாக போனது என்று தெரியவில்லை. இது சர்ச்சையானது எப்படி என்று தெரியவில்லை.

அரசு அறிவுரை பின்பற்றுதல்
நான் இன்று காலை வேறு வீடியோ போட்டேன்,. எல்லாரும் உங்கள் நண்பன் எப்படி என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து, அவர் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதை கூறியிருந்தேன். உங்கள் மூலமாக சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.கொரோனாவுக்கு என்ன அறிவுறுத்தல்களை அரசு கூறியிருக்கிறதோ அதை பின்பற்றுங்கள். அரசு நிறைய முயற்சி எடுத்துள்ளது. அரசு மட்டும் எடுத்தால் போதாது நீங்களும் முயற்சி எடுக்க வேண்டும். நான் பேஸ்புக்கில் யாரும் ஷேர் பண்ணாதீங்க என்று தான் போட்டிருந்தேன்" என்றார்.

விஜயபாஸ்கருக்கு பதில்
அமைச்சர் விஜயபாஸ்கர் உங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்ட போது, "என்னுடைய வீடியோ தவறாக சென்றுள்ளது. முழு வீடியோவை பார்த்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது. நாடக்குழுவுக்காக போட்ட வீடியோ. அந்த வீடியோ குறித்து நிறைய பேர் சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக கூறினார்கள். நான் அந்த வீடியோவில் எங்குமே அரசாங்கத்தை குற்றம்சாட்டவில்லை. மருத்துவமனைகளை குற்றம்சாட்டவில்லை. டாக்டர்களை குற்றம்சாட்டவில்லை. யாரையும் குற்றம்சாட்டவில்லை.

பெட் வசதி இல்லை
இன்றைக்கு நோயாளி ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பது என்பது சவாலாக உள்ளது என்பது உண்மைதான். நாங்கள் மருத்துவமனையில் தொடர்பு கொண்ட நேரத்தில், இங்கு அழைத்து வர வேண்டாம், பெட் வசதி இல்லை என்று கூறினார்கள். அதன்பிறகு ஒரு மருத்துவனைக்கு போனோம். அட்மிட் செய்தோம். இப்போது குணமடைந்து வருகிறார். எங்க குழு உறுப்பினர்களுக்கு நான் சொல்லவந்தது என்னவென்றால், மிகவும் கவனமாக இருங்கள். கையில் சும்மா அடி பட்டால் கூட மருத்துவமனையில் அட்மிட் ஆவது கடினமாக உள்ளது. பெட் கிடைக்கவில்லை என்ற ஒரு வார்த்தையை வைத்து எல்லா மீடியாக்களும் எனது பேச்சை பெரிதுபடுத்திவிட்டார்கள்.

தமிழக அரசுக்கு பாராட்டு
தனிப்பட்ட முறையில் போட்ட வீடியோ. அந்த அளவுக்கு சவால் உள்ளது. அதனால் ஜாக்கரதையாக இருங்கள் என்று சொன்ன வீடியோவை மிகைப்படுத்தி விட்டார்கள். சென்னையில் தினமும் 1000 பேர் என 10 நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வந்திருச்சுன்னா, 10 ஆயிரம் வெண்டிலேட்டர் வைக்க முடியுமா? நாம் கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசும் , தமிழக அரசும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறான வதந்தி சென்றுள்ளது.

அந்த நேரத்தில் பட்டது
நேரம் கொடுத்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சென்று எடுத்துரைப்பேன்..விஜயபாஸ்கர் சார் உங்கள் பணியை வெகுவாக பாராட்டி உள்ளேன். இப்போதும் பாராட்டிக்கொள்கிறேன். நான் செய்திவாசிப்பாளன் நடுநிலையாக உள்ளேன். அரசாங்கத்தையோ, மருத்துவமனையோ குற்றம் சொல்லவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு அந்த நேரத்தில் அசாதாரண சூழலில் மனதில் பட்டது. அதனால் நாடக்குழு உறுப்பினர்களுக்கு சொன்னேன். விழிப்புணர்வு செய்தேன். என் குழந்தைகள் அவர்கள். அவங்க எனக்கு முக்கியம். நான் எந்த இடத்திலும் பெட் இல்லை என்றோ, வேண்டுமென்றே மருத்துவமனையில் திருப்பி அனுப்புகிறார்கள் என்றோ நான் சொல்லவே இல்லை" இவ்வாறு கூறினார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications