"எனக்கு எண்டு கார்டே கிடையாதுடா.." டிடிஎப் வாசன் லைசென்ஸ் ரத்தானா என்ன? கைவசம் வேற ஏற்பாடு இருக்கே
சென்னை: டிடிஎப் வாசன் முன்பு பைக் சாகசங்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சிறையில் இருந்து வரும் நிலையில், முன்பு சைக்கிள் ஓட்டி வீலிங் செய்த வீடியோவை இப்போது சிலர் வெளியிட்டுள்ளார்கள்.
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன், பைக்கை அசுர வேகத்தில் ஓட்டியும் சாகசத்தில் ஈடுபட்டும் இன்றையே 2கே கிட்ஸ் இளைஞர்களிடம் பிரபலமானார். டிடிஎப் வாசன் மீது இருசக்கர வாகனத்தை அச்சுறுத்தும் வகையில் ஓட்டியதாக அடுத்தடுத்து புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி பைக் ரைடிங் சென்றார்.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் ஆபத்தான முறையில்'வீலீங்' செய்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
காயமடைந்த டிடிஎப் வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர் வந்து விழுந்த வேகத்தில் சாதாரண நபர்கள் விழுந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை.. அந்த அளவிற்கு விழுந்த டிடிஎப் வாசன் சிகிக்சைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். டிடிஎப் வாசன் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
டிடிஎப் வாசன் தன்னை ஜாமீனில் விடக்கோரி பலமுறை மனு தாக்கல் செய்தார்,. அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரது காவலை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டிடிஎப் வாசனின் பைக்கை எரிக்க வேண்டும். அவரது யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இது ஒரு புறம் எனில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தார்கள். இதன்படியே டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், அவரது பழைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சைக்கிளிலேயே டிடிஎப் வாசன் வீலிங் செய்வது போன்று வீடியோ உள்ளது. அந்த வீடியோவில் வரும் டிடிஎப் வாசன், "எப்படியாவது காப்பாத்திடு ஆண்டவா" என்று கூறியபடி சைக்கிளை ஓட்டி கீழேவந்து வீலிங் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு எண்டே கிடையாது போல என்று விமர்சித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications