தூண்டிலில் சிக்கிய "முக்கிய" தலைகள்.. அண்ணாமலை சூசகம்.. அமித் ஷா விசிட் முடிந்ததும்.. ஆபரேஷன் ஸ்டார்ட்
சென்னை: உள்துறை அமைச்சர் சென்னை வந்துவிட்டு சென்ற நிலையில், பாஜகவில் முக்கியமான தலைகள் சிலர் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னைக்கு வந்து இருந்தார். வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து அமித் ஷா, சென்னைக்கு வந்தார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அமித் ஷா சென்னை கமலாலயம் சென்றார்.

என்ன நடந்தது?
கமலாலயம் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். 2024 லோக்சபா தேர்தல் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலுக்கு எப்படி திட்டம் வகுப்பது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை எப்படி செய்வது. பாஜகவை எந்தெந்த மாவட்டங்களில் முன்னேற்றம் அடைய செய்வது என்பது போன்ற விஷயங்களை அமித் ஷா ஆலோசனையாக மேற்கொண்டார்.

அதிமுக கூட்டணி
அதேபோல் அதிமுக கூட்டணி குறித்தும் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்குமா? கூட்டணி தேவையா என்பது தொடர்பாக அமித் ஷா ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் எல்லாம் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

என்ன நடக்கும் இனி?
உள்துறை அமைச்சர் சென்னை வந்துவிட்டு சென்ற நிலையில், பாஜகவில் முக்கியமாக தலைகள் சிலர் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதிமுகவில் உள்ள சில தலைகளும், திமுகவில் உள்ள சில நிர்வாகிகளும் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் இல்லாத சில பிரபலங்களும் பாஜகவில் இணைய இருக்கிறார்களாம்.

பாஜக
பாஜக இதற்கான பேச்சுவார்த்தைகளை முடித்து உள்ளது. இவர்களின் இறுதி லிஸ்ட் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சில பிரபலங்களைத்தான் இவர்கள் கட்சியில் சேர்க்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. முன்னதாக தொலைக்காட்சி பிரபலம் ரமேஷ் பிரபா பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வந்தன. ஆனால் இது பற்றி விளக்கம் அளித்த அவர், "பாஜகவுடன் பேச்சுவாரத்தை நடந்து வருகிறது, ஆனால், இன்று நான் பாஜகவில் இணையவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
இந்த நிலையில் பாஜகவின் இந்த ஆபரேஷன் குறித்து அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார். அதில், முக்கிய தலைவர்கள் கட்சியில் சேர உள்ளனர். எங்களிடம் தொடர்பு கொண்டு அவர்கள் பேசி உள்ளனர். விரைவில் அந்த நேரம் வரும் என்று குறிப்பிட்டார். அதன்படியே விரைவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பலர் டெல்லி சென்று ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கோலிவுட், தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் இதில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications