செட்டப் பெண்கள் மூலம் இளம் பெண்களை சிக்க வைக்கும் யூடியூப் குழுவினர்... பிராங்க் ஷோ பிராடுத்தனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரைக்கு வரும் பெண்களை குறிவைத்தே சில யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அதுவும் எப்படி என்றால் செட்டப் பெண்கள் மூலம் பேட்டி கேட்பது போல் நடித்து இளம் பெண்களையும் பேட்டி வலையில் விழ வைத்துள்ளார்கள்.

இப்போது செல்போனும் ஒரு மைக்கும் இருந்தால் யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம் என்கிற நிலைமை உள்ளது. தங்கய் யூடியூப் சேனலில் பார்வையை அதிகரிக்க வைக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்.

அதற்கு பெண்களை அவதூறாக சித்தரிப்பது, வடிவேலு மீம்ஸ் வீடியோக்களை வைத்து கலாய்ப்பது, ஆபாசமாக பெண்களிடம் கேள்விகள் கேட்பது, அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை தேவையற்ற இடங்களில் போட்டு எடிட் செய்து வெளியிடுகிறார்கள். அப்படி வெளியிடப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வியூஸ் கிடைக்கிறது என்பதால் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அத்துமீறல்

அத்துமீறல்

என்ன கேட்கிறார்கள், எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் மைக்கை நீட்டிய உடன் ஜாலியாக சிலர் பேசுவதை யூடியூப் சேனல் நடத்தும் சிலர் தவறாக பயன்படுத்துவது குறித்து குமுறல் கடந்த சில வருடங்களாகவே இருந்தது. இப்போது சென்னை டாக் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் பிராங்க் ஷோ என்ற பெயரில் செய்த அத்துமீறல்களால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல் நடத்தும் சிலர்(எல்லாரும் அல்ல), பிராங்க் ஷோ என்ற பெயரில் செய்யும் காரியங்கள் குறித்து சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாகவே பெண்கள் மீடியாக்களிடம் பேச தயக்கம் காட்டுவார்கள், எனவே அதை கூச்சத்தை போக்கி சகஜமாக பெண்களை பேட்டி அளிக்க வைப்பதற்காக சில கும்பல் நூதன முறையை கையாள்கிறது.

இளம் ஜோடிகள்

இளம் ஜோடிகள்

அதன்படி ஏற்கனவே பணம் கொடுத்து செட்டப் செய்யப்பட்ட 3 அல்லது நான்கு பெண்கள் யூடியூப் குழுவினர் வருவதற்கு முன்பே பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்துவிடுவார்கள். அதில் யார் தனிமையில் இருக்கிறார்கள் என்பதை கவனித்து அவர்கள் பக்கம் அமர்ந்து விடுவார்கள். இளம் ஜோடிகள் பேசுவதை கவனித்து, யூடியூப் குழுவினருக்கு தகவல் கொடுப்பார்கள்.

இளம் பெண்கள்

இளம் பெண்கள்

இந்த குழுவினர் புதிதாக அறிமுகமாவது போல் பேசிக் கொள்வார்கள் செட்டப் பெண்கள் என்பது தெரியாமல் காதல் ஜோடிகள், இளம் பெண்கள் பெருமைக்கு பேட்டி கொடுத்து மாட்டிக் கொள்கிறார்கள். செட்டப் பெண்கள் ஓபனாக பேசுவதை பார்த்து அந்த பெண்களும் ஓபனாக பேசுகிறார்கள். அந்த பெண்கள் கூறும் பதில்களை ஆபாசமாக பதிவு செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்களின் செல்போனண் எண்களையும் வாங்கி விடுகிறார்கள்.

என்ன செய்தார்கள்

என்ன செய்தார்கள்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை டாக் யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஆசின் பாஷா, பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரைக்கு வரும் வசதியான பெண்களிடம் ஒரே ஒரு பேட்டி என்று என பிராங்க் ஷோவுக்காக கெஞ்சி பேட்டி எடுப்பார். அவர்களிடம் ஆசின் பாஷா, நீங்கள் பசங்களுக்கு ஈக்வலாக தம் அடிப்பீங்களா என்று கேட்பார், அதற்கு அவர்கள் அளிக்கும் நகைச்சுவையான பதிலை அப்படியே வீடியோவில் ஏற்றிவிடுவார்கள். இதேபோல் பெற்றோருடன் வரும் இளம் பெண்களிடம் நான் தான் உன் லவ்வர் என்று கூறி பிராங்க் ஷோ செய்து சண்டை போடுவார்கள். அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிடுவதையும் சிலர் வாடிக்கையாக வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+