ஸ்டாலின் "வடக்கே" வீசும் தூண்டில்.. சோனியா காந்தி வந்ததுமே விழுந்த "அந்த" தகவல்.. பாஜகவுக்கு சிக்கலா?
சென்னை: 5 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு மூத்த தலைவர் சோனியா காந்தியின் வருகையானது தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.. சோனியாவின் இந்த வருகையையும், வருகையையொட்டி நடக்க போகும் நிகழ்வையும், பாஜக உன்னிப்பாகவே கவனித்து வருகிறது.
திமுகவை பொறுத்தவரை, கூட்டணி விஷயத்தில் உறுதியாக உள்ளது.. முக்கியமாக, ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுடனேயே சேர்ந்துதான், இந்த முறையும் தேர்தலை சந்திக்க போகிறது. திருமாவளவன் முதல் கம்யூனிஸ்ட் தோழர்கள்வரை இதை உறுதி செய்து வருகிறார்கள்.
தடுமாற்றம்: அதேசமயம் ஒரு தடுமாற்றம் கூட்டணி கட்சிக்குள் இருப்பதாகவே சலசலக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், கடந்த முறை, காங்கிரசுடன் முதலிலேயே பேச்சுவார்த்தை நடத்தி, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை லம்ப்பாக ஒதுக்கிவிட்டது திமுக. இதற்கு பிறகு, கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்க முடியாமல், உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கி, அவர்களை போட்டியிடும்படி சொல்ல நேர்ந்தது. அதனால், இந்த முறை, காங்கிரசுக்கு 10 சீட்டுக்களை திமுக ஒதுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

அதனால், அணி மாறக்கூடும் என்ற தகவல்கள் பரபரத்த நிலையில்தான், கூட்டணியிலிருந்து பாஜகவை அதிமுக கழட்டிவிட்டுள்ளது. மேலும், அதிமுக தரப்பிலிருந்து, தமிழக காங்கிரஸுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 20 சீட் வரை காங்கிரசுக்கு ஒதுக்க அதிமுக ஓகே சொல்லிவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன.
அதிமுக கூட்டணி: அதுமட்டுமல்ல, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்களாம்.. ஆனால், திமுகவுடனான கூட்டணியை எக்காரணம் கொண்டும் முறித்து கொள்ள, ராகுல் காந்தி விரும்பவில்லை என்றெல்லாம் கூடுதல் தகவல்களும் கசிந்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான், சோனியா காந்தியின் தமிழக வருகை அமைந்துள்ளது.. சோனியாவிடம் கூட்டணி குறித்து பேசப்படுமா? என்று கனிமொழி எம்பியிடம், செய்தியாளர்கள் இன்று கேட்டார்கள்.. அதற்கு அவர், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுபேச்சுவார்த்தை எதுவும் இன்று நடைபெறாது என்று கூறியிருக்கிறார். எனினும், கூட்டணி தொடர்பாகவும், சீட் விவகாரம் தொடரபாகவும் சோனியாவிடம் திமுக தரப்பு பேச வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
தொகுதிகள்: அந்தவகையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டநிலையில், இப்போது கூடுதலாக ஒரு தொகுதி கேட்க போவதாக சொல்கிறார்கள்.. அதேபோல, கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளையே இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்க போவதாகவும் தெரிகிறது.. இதற்கு திமுகவின் பதில் என்னவென்று தெரியவில்லை.
ஆனால், காங்கிரஸ் எத்தனை சீட் கேட்டாலும், அதனை ஒதுக்க வேண்டிய நிலைமையில் திமுக உள்ளது.. காரணம், திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதிலும் சிக்கல் உள்ளது..
அதிமுக கூட்டணியா?: ஏற்கனவே, எடப்பாடி தரப்பு காங்கிரஸை மூவ் செய்து வருவதாக சொல்கிறார்கள், மற்றொருபக்கம் திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டுக்களுக்கும் அதிமுக குறி வைத்து வருகிறது. எனவே, அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் திமுக தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமானால், அது காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து சென்றால் மட்டுமே சாத்தியம் என்பதையும் திமுக நன்றாகவே உணர்ந்துள்ளது.
அதுமட்டுமல்ல, தேசிய அளவில் கவனத்தை பெற வேண்டுமானால், காங்கிரஸின் தயவு மட்டுமே தேவையாக உள்ளது.. வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க வேண்டுமானாலும், அதற்கும் காங்கிரஸின் தயவு மட்டுமே தேவையாக உள்ளது.. எனவே, காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கையை திமுக நிச்சயம் ஒதுக்கும் என்றே தெரிகிறது...
தேசிய அளவில் கவனம்: அத்துடன், அதிமுகவுடன் தமிழக காங்கிரஸ் கூட்டணி வைக்க போவதாக வரும் வதந்திகளுக்கெல்லாம், ஒரு முற்றுப்புள்ளி இன்றே வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், சோனியா காந்தியின் இன்றைய தமிழக வருகையானது, மிகுந்த கவனத்தை தேசிய அளவில் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications