தலைவர்கள், திரையுலகினர் புடை சூழ.. கோலாகலமாக நடந்த கருணாநிதி சிலை திறப்பு
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அண்ணாவின் சிலைக்கு அருகே கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையைத்தான் இன்று மாலை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

தலைவர்கள்
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே பல மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்கள் வந்திருந்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிலையைத் திறந்து வைத்தார்.

ராகுல், சோனியா
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே விமானத்தில் சென்னை வந்தனர். சென்னை வந்த சோனியா காந்தி , ராகுல் காந்திக்கு காங்கிரஸார் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக சார்பில் இருவரையும் எம்.பி கனிமொழி வரவேற்றார். காங். மூத்த தலைவர்கள் ப.சிதம்பம், நாராயணசாமி, தங்கபாலு உள்ளிட்டோரும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

சிலை திறப்பு
இருவரையும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து அருகே இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு சோனியா, ராகுல் செல்கிறார்கள். ஓய்வுக்குப் பின்னர் அறிவாலயம் சென்று கருணாநிதி சிலையைத் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

ரஜினிகாந்த், வடிவேலு
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், வடிவேலு, நாசர், பிரபு, இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் விழா பங்கேற்றனர். அதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும் ,கலந்து கொண்டனர். திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பல்துறையினர் குவிந்ததால் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications