விரைவில் தவெக பைல்ஸ் ரிலீஸ்.. மொத்தமா மாட்ட போறாங்க.. அடித்து ஆடும் திமுக.. ஆர்.எஸ் பாரதி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணி உருவாகி சில மாதங்களே ஆகிறது. அதற்குள் ஏராளமான சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. விசிக, காங்கிரஸ் நிர்வாகிகளே தவெக அரசை தினசரி விமர்சிக்கிறார்கள். தவெக ஆட்சியை கவித்து மீண்டும் ஆட்சிக்கு வர திமுக, அதிமுக திட்டமிட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தவெக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தவெக பைல்களை திரட்டி வருகிறோம். மிக விரைவில் மாட்டுவார்கள் என ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "டாஸ்மாக் பொதுத்துறை என்பதால் அதன் கிடங்குகளை மருத்துவத்துறை பராமரிப்பதில் தவறில்லை. அதற்காக டெண்டர் கூறியுள்ளோம் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். மருத்துவத்துறைக்கும், டாஸ்மாக்குக்கும் சம்பந்தமே கிடையாது. ஆக ஏதோ ஒன்று நடக்கிறது. விரைவில் வெளி வரப்போகிறது.

soon-dmk-will-release-tvk-files-said-rs-bharathi

என்னது வெளிப்படைத்தன்மையா

உங்களுக்கு எல்லாம் தெரியும், ஒரு 11 நிறுவனங்கள் மதுபானம் கொடுக்கும் உரிமத்தை ரத்து செய்தார்கள். 24 மணி நேரத்தை ரத்து உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அதே நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்தனர். ஏதோ ஒரு மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இதில் ஏதோ வெளி மாநிலத்தவர்கள் நுழைவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்போருக்கு இனி எந்த பிழைப்பும் கிடையாது. இந்த அரசு எங்கே வெளிப்படையாக செயல்படுகிறது.

இதுவா வெளிப்படைத்தன்மையா. ஒரு நாள் ரத்து என்கிறார்கள், அடுத்த நாள் அதே நிறுவனங்களுக்கு மீண்டும் கொடுக்கிறார்கள் இதுவா வெளிப்படைத்தன்மை. ரத்து என சொல்லிவிட்டு மீண்டும் அதே நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையில் அந்த நிறுவனம் ஆஜராகியுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குள்ளே செல்வதற்கு காரணமே அந்த நிறுவனம் தான்.

விரைவில் தவெக பைல்ஸ்

அதே நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் வேலை கொடுத்துள்ளனர். அவர்கள் சொல்வதற்கும் நடந்து கொள்வதற்கும் தொடர்பே இல்லை. மிக விரைவில் மாட்ட போகிறார்கள். நாங்கள் ஒவ்வொரு பைலாக சேகரித்து கொண்டிருக்கிறோம். இன்னும் 6 மாதங்களில் தமிழக மக்களிடம் வெட்ட வெளிச்சம் போட்டு போட்டுவோம். ஆன்மிகவாதிகள் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹராம் செல்வார்கள். திருச்செந்தூரில் முதலமைச்சருக்கு கோஷமிட்டு அதை கெடுத்துவிட்டனர். பக்தர்கள் துயரத்தில் உள்ளனர்.

மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தினமும் செய்தித்தாளை எடுத்தாலே இந்த பக்கம் ஒரு கொலை, அந்த பக்கம் ஒரு கொலை செய்தி உள்ளது. மக்களுக்கு செய்தித்தாள் படிக்கும் ஆசையே போய்விட்டது. மொத்த கிரிமினல் கூட்டமும் இருக்கும் இடம் தவெக. எந்த ஒரு கொலை, பாலியல் நடந்தாலும் தவெக தொடர்பு என செய்தி வருகிறது. ஆதவ் அர்ஜுனாவின் வில்லிவாக்கம் தொகுதியில் குடை ஊர்வலம் நடந்தது. அதில் சிங்கப்பெண் படையை சேர்ந்த காவலர் ஒருவரை பாலியல் சீண்டல் செய்தார்.

பெண் காவலரிடமே சீண்டல்

அந்த நபரை கைது செய்த ஒரு மணி நேரத்தில் லண்டனில் இருந்து அழைப்பு வந்தது. அந்த நபரை விடுவித்துவிட்டனர். பெண் போலீஸின் கையை பிடித்து இழுத்தவரையே விட்டுவிட்டார்கள் என பார்ப்பவர்கள் நினைக்க மாட்டார்களா. அப்படியென்றால் நாமும் செய்யலாம், தலைமை எதுவும் பண்ணாது என தவெகவினர் துணிந்து குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். தவெக கூட்டணியினர் கற்பனையாக சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+