சென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களின் நேர அட்டவணைகள் விவரம் அருகே உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மின்னணு பெயர் பலகையாக இனி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

சென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் விமான நிலையம், சென்ட்ரல்-கோயம்பேடு- விமான நிலையம், சென்டரல் - அண்ணாசாலை- பரங்கிமலை என இந்த பகுதிகளுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.

Soon, get chennai metro rail timings at bus stops

சென்னையில் மெட்ரோ ரயில்கள் பல்வேறு வழித்தடத்தில் 10 நிமிடம் அல்லது 5 நிமிடம், சில நேரங்களில் 15 நிமிட கால இடைவெளியில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில்நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிலையங்கள் அனைத்திலும் டிஜிட்டல் வடிவில் மெட்ரோ ரயில் நேரங்கள் தெரிய போகிறது. இதற்காக ரயில் புறப்படும் மற்றும் வருகை நேரங்கள் குறித்த அட்டவனை மக்கள் பார்வைக்கு மின்னணு தகவல் பலகையாக வைக்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் வருகை புறப்பாடு குறித்து மின்னணு தகவல் பலகை நேற்று திறந்து வைக்கப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் மெட்ரோ ரயில நிலையத்தின் அருகே உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இந்த மின்னணு பலகை வைக்கப்பட உள்ளது.

விமான நிலையத்தில் வைத்துள்ள மின்னணு தகவல் பலகை குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம், வெளியிட்டுள்ள அறிக்கையில், " மெட்ரோ ரயில் புறப்படும் வரும் நேரங்களை நிகழ்நேர அடிப்படையில் காண்பிக்கப்படும் விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் மெட்ரோ ரயிலில் தங்கள் பயணத்தைத் திட்டமிட இது உதவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+