சென்னை மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப் வசதி.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் வெயிட்டிங்! செம பிளான்
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஒன்றில் புதிய டைனமிக் ரூட் மேப் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டைனமிக் ரூட் மேப்பில் ரயில் செல்லும் வேகம், வெப்ப நிலை, அடுத்து வரும் ரயில் நிலையம், முக்கியமான லேண்ட் மார்க் உள்ளிட்டவை டிஸ்பிளே செய்யப்படுகிறது. விரைவில் இந்த வசதி அடுத்தடுத்த ரயில்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
சென்னையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மெட்ரோ ரயில்கள் மாறியுள்ளன. தற்போது சென்னையில் புளூ மற்றும் கிரீன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. புளூ லைனில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்த்தில், சென்னை சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுன்ட் வரையிலும் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர், விமான நிலயம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட மிக முக்கிய வழித்தடங்களில் தற்போது மெட் ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் போது போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால், நாளடைவில் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் மின்சார ரயில்களுக்கு நிகராக மாறத்தொடங்கியது.
இப்போது எல்லாம் பீக் நேரங்களில் மெட்ரோ ரயில்களில் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது. பயணிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து மெட்ரோ ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில்களை பொறுத்தவரை பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு வசதிகள் ரயில் நிலையத்திலும் சரி, ரயில்களிலும் சரி செய்யப்பட்டுள்ளன.
ரயில்களில், அடுத்த ஸ்டேஷன் வரும் தகவல் அறிவிப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் விரைவில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோவின் Phase I -ல் ரயில் எண் 103ல் ஒரு அட்டகாசமான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டைனமிக் ரூட் மேப்பில் அருகில் உள்ள லேண்ட் மார்க், நேரம், ரயிலின் வேகம், டெம்பரேச்சர் உள்ளிட்டவை டிஸ்பிளே செய்யப்படுகிறது.
ரயிலின் கடைசி நிறுத்தம் ஸ்கிரீனில் மேல் பகுதியில் இடம் பெற்றுள்ளது. அடிப்பகுதியில் இடது பக்கத்தில் தற்போது எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறது. அடுத்த ரயில் நிலையம் என்ன? என்பது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் கூட எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த டிஸ்பிளே ஸ்கிரீனில் உள்ள தகவல்கள் தெளிவாக இடம் பெற்றுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயிலில்தான் இந்த வசதி இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த புதிய வசதிகளுடன் கூடிய டிஸ்பிளே எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணித்து வருவதாகவும் விரைவில் அடுத்தடுத்த ரயில்களில் இந்த வசதி செய்யப்படும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications