சென்னை மெரினாவுக்கு கார், பைக்கில் போறீங்களா? நேர அடிப்படையில் கட்டணம்! மாநகராட்சியின் பிளான்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வாகனங்கள் எவ்வளவு நேரம் நிறுத்தப்படுகிறதோ அதற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பெசண்ட் நகர், நீலாங்கரை கடற்கரைகளிலும் அமல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றது சென்னை மெரினா கடற்கரை. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தால், மக்கள் பார்த்துவிட்டு செல்லும் இடங்களில் தவறாமல் மெரினா கடற்கரை இடம் பெற்று இருக்கும். சென்னைக்கு சுற்றுலா வரும் வெளிமாநில பயணிகள் கூட மெரினா கடற்கரைக்கு கட்டாயம் வந்து செல்வார்கள்.

வெளியூர் வாசிகள் மட்டும் இல்லை. சென்னை மக்களுக்கு கூட பிரதான சுற்றுலாத்தலம் என்றால் அது சென்னை மெரினா கடற்கரைதான். விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் கோடைக்காலத்தில் சொல்லவே வேணாம்.. சாதாரண நாட்களில் கூட மெரினா கடற்கரையில் இளைப்பாற மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதை பார்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் பலரும் உடற்பயிற்சி, வாக்கிங்க் செல்வதற்காக மெரினா கடற்கரைக்கு வருகை தருவார்கள்.
பார்க்கிங் கட்டணம்
மெரினா கடற்கரைக்கு வருபவர்களில் கார், பைக்குகள் என சொந்த வாகனங்களில் வருபவர்களும் அதிகம். அப்படி வருகை தருபவர்கள், சர்வீஸ் சாலையில் ஆங்காங்கே வண்டியை நிறுத்திவிட்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு மெரினாவிற்கு வரும் மக்கள் சிரமப்பட்டனர். இதனை சரிகட்டும் விதமாக தனியார் நிறுவனம் மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கட்டணம் வசூலிக்கும் முறை கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மெரினா சர்வீஸ் சாலையில் ஸ்மார்ட் பார்கிங் முறையை கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கட்டண அடிப்படையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதியை கொண்டு வரலாம் என்பது தெரியவந்துள்ளது.
ஷாப்பிங் மால்களில் இருப்பது போல
அதாவது, ஷாப்பிங் மால்களில் இருப்பது போல் நேர அடிப்படையிலான கட்டண வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகனம் எத்தனை மணி நேரம் நிற்கிறதோ அதற்கு ஏற்றபடி கட்டணம் விதிக்கப்படும். இந்த முறையை வரும் ஜுலை மாதத்திற்குள் அமல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் கூறுகையில், "மெரினா சர்வீஸ் சாலையில் ஸ்மார்ட் பார்க்கிங் முறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை எப்படி இருக்கும் என்றால், வணிக வளாகங்களில் எப்படி நேர அடிப்படையில் வசூலிக்கிறார்களோ அது போல வசூலிக்கப்படும். அதாவது வாகனங்கள் உள்ளே வரும் போது டிக்கெட் கொடுக்கப்படும். அந்த டிக்கெட்டை வாங்கி கொண்டு பார்க்கிங்க் செய்து கொள்ளலாம்.
4 மாதங்களில்
பின்னர் வாகனத்தை எடுத்து வெளியே செல்லும் போது கட்டணத்தை செலுத்த வேண்டும். எவ்வளவு நேரம் நின்று இருக்கிறது என்பதை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், வாகன பார்க்கிங் ஒழுங்குப் படுத்தப்படும். மெரினா நீச்சல் குளம் பகுதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஐந்து நுழைவு பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட உள்ளது. கார்கள் நிறுத்த தனி இடம், பைக்குகள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். இன்னும் 4 மாதங்களில் இதை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications