maaman ott release: ஒருவழியா வந்துட்டாரு மாமன்.. சூரியின் மெகா ப்ளாக்பஸ்டர் ஓடிடி ரிலீஸ் எப்போது?
சென்னை: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் கதையில் அவரே நாயகனாக நடித்து வெளியான மாமன் திரைப்படம் பெருவெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த படம் நேரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதே நேரத்தில் Z 5 (Z5 ( முன்னதாக ZEE 5) ஓடிடி தளத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் என ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கு மிகப்பெரிய சிறப்பு முனையை கொடுத்தது. பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்ற அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
தொடர்ந்து விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்த அவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில் இனி நாயகனாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதை மற்றும் நடிப்பில், மாமன் திரைப்படம் கடந்த மே மாதம் 16ஆம் தேதி வெளியானது. சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான படம் 'மாமன்'. இதில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது. குடும்ப செண்டிமெண்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்த நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதம் இறுதி வரை இந்த படம் தியேட்டர்களை ஆக்கிரமித்து இருந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸை படக்குழு தள்ளிப் போட்டு இருந்தது.
அதே நேரத்தில் இந்த படத்துடன் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கிடையே மாமன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. Z5 ( முன்னதாக ZEE 5) தளம் இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றிருந்த நிலையில் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சூரிக்கு பெரும் வரவேற்பை கொடுத்த மாமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றிருந்த நிலையில் விரைவில், இந்த படம் z5 ott, ZEE tamil தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"coming soon" என்ற விளம்பரத்துடன் இந்த படத்தின் ப்ரோமோ தற்போது தொலைக்காட்சியில் வெளியாகியிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications