சௌமியா செண்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா? காஞ்சிபுரத்தில் ஆரம்பமான புதிய பயணம்!பெண்கள் ஓட்டுக்கு குறி?
சென்னை: "தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்" என்ற பெயரில், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி இன்று தன்னுடைய சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.. பெண்களின் 10 முக்கிய உரிமைகளை வலியுறுத்தும் இந்தப் பயணம், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் 108 நாட்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சௌமியா அன்புமணி
அதன் தொடர்ச்சியாகவே இப்போது பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி, சௌமியா அன்புமணி இந்த மகளிர் உரிமை பயணத்தை ஆரம்பிக்க போகிறார்.. காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை 9.30 மணிக்கு இந்தப் பயணத்துக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த பயணத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரத்தில் சம வாய்ப்பு, மது மற்றும் போதைப்பொருளால் பாதிக்கப்படாமல் வாழும் உரிமை, வன்முறை இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில்பயிற்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், உணவு, வீடு, குடிநீர், சுகாதாரம், மருத்துவ சேவை, சமூக பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 முக்கிய உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பாமக தரப்பு தெரிவித்துள்ளது.
களத்தில் குதித்த சௌமியா
பாமகவை பொறுத்தவரை, உள்கட்சி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. ஆனாலும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக தொடர அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அன்புமணி தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது சௌமியா அன்புமணியும் களத்தில் இறங்கியுள்ளார்.
ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிட்ட போது, பெண்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.. பாமகவுக்கு இது பிளஸ்ஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
பாமகவுக்கு பெண்கள் ஓட்டு
இதன் காரணமாகவே, தமிழகம் முழுவதும் பெண்களை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது.. இதற்கு அன்புமணியும் ஓகே சொன்னதையடுத்து, இந்த மகளிர் உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு "சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்து பேசவும், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தப் பயணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்டிமென்ட் - காஞ்சிபுரம்
ஆன்மீக நகரமான காஞ்சிபுரத்திலிருந்து இந்த பயணத்தை தொடங்குவது ஒரு நல்ல சென்டிமெண்ட் என்று பாமக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.. இன்று பயணம் தொடங்குவதற்கு முன்பு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்னரே சௌமியா அன்புமணி தனது பயணத்தை தொடங்க போவதாகவும் கூறப்பட்டது.
உலகிலேயே பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம் என்று பாமக தரப்பு கூறினாலும், நடைமுறையில் அவர்களுக்குரிய உரிமைகளும் மரியாதையும் முழுமையாக கிடைப்பதில்லை என்ற கருத்தை இந்தப் பயணம் முன்வைக்கிறது.
இந்தப் பயணத்தின் மூலம், பாமக பெண்களின் வாக்குகளைத் திரட்டுவதில் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது தெளிவாகிறது. இது தமிழக அரசியலில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதுடன், பாமகவுக்கும் வலு சேர்க்கும் என்றே நம்பப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications