சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க சொல்றீங்க.. ராதாரவி கடுப்பாய்ட்டாரா.. திரும்பவும் திமுகவில் சேர போகிறாரா?!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வந்து கொண்டிருக்கிறது. தமிழக பாஜகவில் உள்ள ராதாரவி திரும்பவும் திமுக பக்கம் போக போகிறாராம்!

Recommended Video

    BJP-தாவுகிறாரா Kushboo? | மீண்டும் DMK-வுக்கு Radha Ravi? |BJP களேபரம்

    பாஜக என்றாலே பிராமணர்களுக்கான கட்சி, நாடார் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி, கவுண்டர் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி என்ற பெயர் உள்ளது. ஆனால் ஓபனாக சொல்லபோனால், ஆர்எஸ்எஸ் - பிராமணர் ஆதரவு கட்சியாகவே இது பார்க்கப்படுகிறதே தவிர தமிழகத்தில் இந்தக் கட்சியை யாரும் தேசியக் கட்சியாக பார்க்கவில்லை.

    காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அங்கீகாரம் கூட இந்த விஷயத்தில் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.. இதனால்தான் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியாமல், என்னென்னவோ வழிகளை கையாண்டு வருகிறது.

    தமிழகம் தப்பி ஓடிய ஸ்வப்னா? வழியில் 'நந்தினியிடம்' பேசியதாக பரபர தகவல்.. வெளியான சிசிடிவி காட்சிதமிழகம் தப்பி ஓடிய ஸ்வப்னா? வழியில் 'நந்தினியிடம்' பேசியதாக பரபர தகவல்.. வெளியான சிசிடிவி காட்சி

    பாஜக

    பாஜக

    அதில் பெரிதும் எதிர்பார்த்து எதிர்பார்த்து நொந்து போனது ரஜினியின் வருகையைதான்.. கடைசிவரை அவரை தன் பக்கம் மொத்தமாக பாஜகவால் இழுக்க முடியவில்லை.. சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக ராதாரவியைதான் இழுக்க முடிந்தது.. கவர்ச்சிகரமான பிரமுகர்களான ஜீவஜோதி, நமீதா என்று பாஜகவின் லிஸ்ட் போய் கொண்டிருக்கிறது.

    காயத்ரி

    காயத்ரி

    இதில் ராதாரவி சற்று அப்செட் ஆகி உள்ளாராம்.. காரணம், காயத்ரி ரகுராம், நமீதாவுக்கு நிர்வாகிகள் பட்டியலில் இடம் கிடைக்கும்போது, தனக்கு அந்த அங்கீகாரம்கூட இல்லையே என்று நொந்து போய் உள்ளாராம்.. ராதாரவியை பொறுத்தவரை, போகாத கட்சியே இல்லை.. கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார்.. இப்போது சமீபத்தில் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்!

    தேங்காய் மூடி கட்சி

    தேங்காய் மூடி கட்சி

    இவர் பாஜகவுக்கு போன நேரம் ஏகப்பட்ட சர்ச்சைகள், பிரச்சனைகள், விவாதங்கள் என ஆரம்பித்துவிட்டது.. அத்துடன் "தேங்காய் மூடி கட்சி" என்று சொந்த கட்சியான பாஜகவை பொது மேடையிலேயே இவர் பேசியது பெரும் சர்ச்சையானது. எனினும், ராதாரவிக்கு ஏன் பொறுப்பு தரவில்லை என தெரியவில்லை.. ஒருவேளை இவரது திராவிடர் கட்சிக்கான பிம்பம் இன்னும் உடையவில்லையோ, அல்லது திராவிடர் கழகங்களில் இருந்து தாவி வந்த பிரமுகரை பாஜக இன்னும் நம்பவில்லையோ தெரியவில்லை.

    சீனியர்

    சீனியர்

    அதேசமயம், அரசியல் அனுபவமே இல்லாத காயத்ரிக்கும், நமீதாவுக்கும் பொறுப்பு தந்ததும் கொஞ்சம் ஓவர்தான்.. என்ன இருந்தாலும் ராதாரவி சீனியர்.. பல விஷயங்களை கரைத்து குடித்தவர்... நல்ல அனுபவசாலி.. சிறந்த பேச்சாளர்.. இதையெல்லாம் பயன்படுத்தி கொள்ளாதது ராதாரவியைவிட பாஜகவுக்குதான் நஷ்டமும், என்று சொல்ல தோன்றுகிறது.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    இந்த சமயத்தில், ராதாரவி, திரும்பவும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், நீக்கப்பட்ட இடத்தில் அவருக்கு திரும்பவும் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும், முக்கியத்துவம் இருக்கும் என தெரியவில்லை.. அதேசமயம், திமுக என்றில்லை, எந்த கட்சியில் ராதாரவி இணைந்தாலும் அது ஆச்சரியமோ - அதிசயமோ - அதிர்ச்சியோ தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை!

    English summary
    sources say that actor radharavi may join in DMK again
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X