"அந்த" பக்கம் தாவ தயாராகிட்டாங்களாமே.. யார் அவர்கள்.. தகிப்பில் அதிமுக.. டென்ஷனில் எடப்பாடியார்!
ரஜினி கட்சியில் சேர அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தயாராகி வருகிறார்கள்
சென்னை: மிக முக்கியமான விஷயம் ஒன்று கசிந்து வருகிறது.. அதன்படி, பதவியில் உள்ள சில அதிமுக புள்ளிகள் ரஜினி பக்கம் தாவ ரெடியாகி வருகிறார்களாம்..!
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே, அவருடன் சேர பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. இதில் மறைமுகமாகவும் ரஜினியுடன் சில கட்சி தலைவர்கள் பேசி வருவதாகவும் சொல்லப்பட்டது..
இதற்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. ஒருசில எம்எல்ஏக்கள், முதல் எம்பிக்கள் வரை ரஜினி கட்சியில் இணைய 6 மாதத்துக்கு முன்பே பேச்சு நடத்தினார்களாம். ஆனாலும் இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எதிர்பார்ப்பு
இந்நிலையில், ஜனவரியில் கட்சித் துவக்க போவதாகவும், அதனை டிசம்பர் 31ல் தேதி அறிவிக்க போவதாகவும் சொன்னதில் இருந்தே, ஏகப்பட்ட விறுவிறுப்புகள் அரசியல் களத்தில் நடந்து வருகின்றன.. அதையொட்டி விவாதங்களும் பரபரத்து வருகின்றன.. அதற்கேற்றபடி ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன.

தீவிரம்
பூத் கமிட்டிகளை அமைப்பது, ரஜினி மக்கள் மன்றத்திற்குப் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்... இதனால், தமிழக கட்சிகளில் உள்ள தொண்டர்களும் ரஜினி கட்சியில் இணைய முயன்று வருகிறார்கள். இதுபோன்ற சூழலில்தான், மாற்றுக் கட்சியில் இருந்து ரஜினி தொடங்கவுள்ள கட்சிக்கு தாவ பலர் தயாராகி உள்ளனராம்.. இப்படி தாவி வருபவர்கள் எல்லா கட்சிகளிலுமே இருக்கிறார்களாம்..

ரிப்போர்ட்
குறிப்பாக, அதிமுகவில் கணிசமாக இருப்பதாக தெரிகிறது.. அதுவும் அவர்களில் பெரும்பாலும் சிட்டிங் எம்எல்ஏக்கள் என்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், இதுகுறித்த தகவல் உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றுள்ளது.. அதை பார்த்த எடப்பாடியார் ஷாக் ஆகிவிட்டாராம்.

கூட்டணி
"ரஜினிகாந்த் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே தெரிவித்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் முதல்வர் மீளாத நிலையில், இந்த எம்எல்ஏக்களின் கட்சி தாவல் மேலும் கலக்கத்தை தந்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கமல் டென்ஷன் ஏற்படுத்தி கவரும் நிலையில், இந்த எம்எல்ஏக்களின் தாவல் புதிய சிக்கலை அதிமுக தலைமைக்கு தந்து வருகிறதாம்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications