எல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக
நாங்குநேரி தேர்தலை அமமுக சந்திக்கும் என்று கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: யாரை பார்த்து.. லெட்டர் பேடு கட்சின்னு சொல்றீங்க என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஏற்கனவே சவால் விட்டவர் அமமுக பொதுச்செயலாளர் தினகரன். அதனால்தானோ என்னவோ, அடுத்தக்கட்ட தேர்தலுக்கு அமமுகவை தயார்படுத்திவிட்டார் டிடிவி தினகரன்.
சில தினங்களுக்கு முன்பு, அதாவது வேலூர் தேர்தலுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "அமமுக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக உள்ளோம். இதனால்தான் எம்பி தொகுதியில் கூட போட்டியிடவில்லை.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்ட மன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம். ஏன் என்றால், இப்போது நாங்கள் போட்டியிட்டால், 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கும்போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்" என்றார்.

உள்ளாட்சி தேர்தல்
இதைதவிர, கண்டிப்பாக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இப்ப சேதி என்னவென்றால், கட்சியை பதிவு செய்யும் முயற்சி நிறைவடைந்து விட்டதாம். அதனால் நாங்குநேரி தேர்தலுக்கு ரெடியாக தினகரன் தரப்பு ரெடியாகி விட்டதாக தெரிகிறது. பொது சின்னம் கிடைத்தால், நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளாராம்.

அதிமுக
ஏற்கனவே வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாததால், அக்கட்சியின் வாக்குகளை அப்படியே மொத்தமாக அதிமுகவே அள்ளிக் கொண்டது. இது போக அமமுக தரப்பின் முக்கிய நிர்வாகிகள் தாய் கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.

மறுப்பு
இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலை சந்திக்க தினகரன் தயார் ஆகி வருகிறார். இதனால் அமமுக புத்துயிர் பெற்று வரும் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும், தினகரனை ஜெயிலில் சசிகலா சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியதாக செய்திகள் வந்ததுதான் நமக்கு இடிக்கிறது.

சசிகலா
கட்சியை பலப்படுத்த தினகரன் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், அமமுக மீதான சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்பது நமக்கு வெளிப்படையாக தெரியவில்லை. ஆக மொத்தம்.. நாங்குநேரி தொகுதிக்கு அமமுக ஜரூராக ரெடியாகி வருவது மட்டும் தெளிவாகி வருகிறது.
எல்லாஞ்சரி.. எத்தனை ஓட்டு விழும்னு தெரியலையே
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications