இதெல்லாம் உண்மையா.. அந்த கட்சிக்கு வெறும் "2 சீட்"டாமே.. அப்படி நடந்தா பெரிய சிக்கலாய்ருமே!
விசிகவுக்கு வெறும் 2 சீட் என்கிறார்கள்
சென்னை: உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தமிழக அரசியலில் சுற்றி சுற்றி வருகிறது... உண்மையிலேயே திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க போகிறது என்ற கேள்வியையும் அந்த தகவல் பரவலாக எழுப்பி வருகிறது.
விரைவில் தேர்தல் வரப்போகிறது.. ஆனால், இன்னும் ஒரு கூட்டணியும் இறுதியாகவில்லை.. முடிவாகவில்லை.. குழப்பம் மேல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அதிருப்திகளும் ஆங்காங்கே வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன.

சில கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.. சில கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அந்தந்த கூட்டணி கட்சி தலைமை இன்னும் அழைக்கவே இல்லை.. இதுபோன்ற சூழலில்தான் பல்வேறு யூகங்களும், தகவல்களும், அனுமானங்களும் தினந்தோறும் கிளம்பி வருகிறது.. அந்த வகையில் இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, விசிகவுக்கு இந்த முறை வெறும் 2 தொகுதிகள் மட்டுமே தரலாம் என்று திமுக யோசித்து வருகிறதாம்... இதை கேள்விப்பட்ட திருமாவும், தங்கள் கட்சி பலமாக உள்ள நிலையில், உட்கட்டமைப்பையும் வலுப்படுத்தி வைத்துள்ள நிலையில், பலர் தங்களிடம் சீட்டு கேட்டு வரும் நிலையில், வெறும் 2 சீட் என்பது சாத்தியமில்லை.. குறைந்தது 10 சீட்டாவது திமுக தரப்பில் கேட்கலாம் என்று முயன்று வருகிறாராம்.
ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், விசிகவும் இன்னும் திமுக கூட்டணியில் உறுதியாகவில்லை போல தெரிகிறது. இத்தனைக்கும், உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட தயார் என்று திருமாவளவன் அழுத்தமாக சொல்லாவிட்டாலும், அது சம்பந்தமான மறுப்பை இதுவரை சொல்லவில்லை.. அதனால் எப்படியும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட இணங்குவார் என்றே தெரிகிறது. அப்படி இருந்தும் ஒற்றை படை இலக்கத்தில் சீட் தந்தால் விசிகவுக்கு சிக்கல்தான்..
அதேசமயம், "திமுகவுக்கு அவ்வளவு குறைவான சீட்டுகளை விசிகவுக்கு தராது.. விசிகவின் பலமும் திமுகவுக்கு நன்றாகவே தெரியும்.. அதுமட்டுமல்ல, கூட்டணிக்குள் எந்தவித அதிருப்தியும் வரக்கூடாது என்பதிலும் ஸ்டாலின் மும்முரம் காட்டி வருவதால், நிச்சயம் விசிகவுக்கு தாராளத்தன்மை காட்டப்படும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications