அந்த ரூமில் அமித்ஷாவை சந்தித்த அந்த 2 முக்கிய புள்ளிகள்.. யாரும் எதிர்பாரா சந்திப்பு..!
சென்னையில் அமித்ஷாவை 2 முக்கிய புள்ளிகள் சந்தித்து பேசினார்களாம்
சென்னை: அமித்ஷா சென்னை வந்திருந்த போது 2 விஐபிக்கள் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. இந்த விஷயமே இப்போதுதான் கசிந்து வருகிறது!
அமித்ஷா ஒருநாள்தான் வந்துபோனார்.. ஆனால், இன்னமும் அவரது சென்னை வருகையின் தாக்கம் குறையவில்லை.. அன்று அவர் டெல்லியில் இருந்து கிளம்புவதற்கு முன்னால் ஏற்பட்ட பரபரப்பு, அவர் மறுபடியும் டெல்லிக்கு போய் சேர்ந்தும் அடங்கவில்லை.
இதற்கு காரணம், அமித்ஷாவுடன் யார் யார் என்ன பேசினார்கள் என்று தெரியாததுதான்.. ரஜினியை சந்திக்க போகிறார், அதற்கான ரகசிய இடம் தயார் என்றார்கள்.. ஒன்றையும் காணோம்.. அதுபோலவே, முக அழகிரி சந்திக்க போகிறார், மதுரையில் இருந்து காரில் கிளம்பி ஆன் தி வே-யில் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.. அதை பற்றியும் காணோம்! இப்படி புதிராகவும், புரளியாகவும் அமைந்தது அமித்ஷாவின் வருகை!

ஆனால், அமித்ஷா யாரை சந்திக்க போகிறார் என்று சொன்னார்களோ, அவர்களை தவிர 2 பேர் சந்தித்து பேசியுள்ளனர்.. ஒருவர் விபி துரைசாமி.. இவர் திமுகவில் இருந்து புதிதாக தாமரையில் மலர்ந்தவர்.. தற்போது பாஜகவின் புதிய துணை தலைவரும்கூட!
அமித்ஷாவை நேரில் சந்தித்த இவர்,"நீங்க தான் இரண்டாம் இரும்பு மனிதர்" என்று சொன்னாராம்.. அப்படி சொல்லி ஒரு புத்தகத்தையும் அவருக்கு பரிசாக தந்திருக்கிறார்.. அந்த புத்தகம் பெயர் 'தி மேன் ஹூ சேவ்டு இந்தியா" என்பதாகும்,.. அதை எழுதியவர் பிரபல எழுத்தாளர் சென்குப்தா.. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், சமஸ்தானங்களை சர்தார் வல்லபபாய் படேல் இணைத்து, நாட்டை வலிமைப்படுத்திய வரலாறு பற்றியதாம் அந்த புத்தகம்!
அதேபோல இன்னொருவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.. அவர்தான் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி.. வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் "ஜல் ஜீவன் மிஷன்" திட்டத்தை, தமிழக ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தியதாக வேலுமணியை அமித்ஷா வெகுவாக பாராட்டினாராம். அமித்ஷா சென்று இத்தனை நாள் கழித்துதான் இந்த தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!











Click it and Unblock the Notifications