ரஜினிகாந்த் அதிரடி முடிவு.. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த கையோடு.. பரபரக்கும் தகவல்..!
ரஜினி வெளிநாடு சிகிச்சைக்கு செல்வதாக கூறப்படுகிறது
சென்னை: அடுத்த சில நாட்களில் சிகிச்சைக்காக ரஜினிகாந்த் வெளிநாடு செல்வார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
எண்ணற்ற ரசிகர்கள் காத்து கிடந்த நிலையில், ஒருசில கட்சி தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 25 வருடம் கழித்து தன் முடிவை பகிரங்கமாக ரஜினி தெரிவித்துவிட்டார்..
ஆனாலும், உடல்நிலை பிரச்சனை ரஜினிகாந்த்துக்கு ஏற்கனவே இருந்து வரும்நிலையில், கடந்த ஒரு மாதமாக ரஜினி மக்கள் மன்ற வேலைகள் ஏன் சூடுபிடித்தன? பூத் கமிட்டி அமைப்பது முதல் கட்சிக்கான நிர்வாகிகள் நியமனம் வரை ஏன் செய்யப்பட்டன? வாரத்துக்கு ஒருமுறை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் ஏன் நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை.

கட்சி
கட்சியே ஆரம்பிக்க போவதில்லை என்று ரஜினி அறிவித்தும்கூட, இன்னும் ஒருசில கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை நம்பிக் கொண்டிருப்பதும், முடிவை விரைவில் மாற்றி கொள்வார் என்று தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்தி கொள்வதும் நடந்து வருகிறது.. மேலும் சிலர், எப்படியும் நம்ம கட்சிக்குதான் ரஜினி வாய்ஸ் தருவார் என்ற அடுத்த கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஷூட்டிங்
ஆனால், அண்ணாத்த பட வேலையில் ரஜினி பிஸியாக இருக்கிறார்.. அந்த படத்தை நம்பி பலர் இருப்பதால், அதை விரைவில் முடித்துதரும் நிலையிலும் இருக்கிறார்.. பிப்ரவரி மாத இறுதியில் இந்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.. இந்நிலையில், ஒரு தகவல் கசிந்து வருகிறது.. அது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரிவில்லை...

வெளிநாடு
அண்ணாத்த படத்தை முடித்து தந்துவிட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா போக போகிறாராம் ரஜினி.. தனக்கு உடனடியாக மேல் சிகிச்சை வேண்டும் என்று ரஜினி உணர்கிறாராம்.. அதனால், அடுத்த சில நாட்களில் அமெரிக்கா அல்லது சிங்கப்பூருக்கு செல்ல பிளான் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது சாத்தியமா என்று தெரியவில்லை.. எந்த நாட்டை பார்த்தாலும் கொரோனா இருக்கிறது.. அதிலும் புதிய வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது.

எதிர்பார்ப்பு
நம் நாட்டிலேயே தொற்றை நினைத்து பயந்துதான், கட்சி ஆரம்பிக்கும் முடிவை விட்டுவிட்டார்.. அப்படி இருக்கும்போது, வெளிநாட்டு பயணம் இந்த சூழலில் தேவையா என்ற கேள்வியும் எழுகிறதுஒருவேளை அதற்கான சூழலும், பத்திரமான பாதுகாப்பும், அமைந்தால், நிச்சயம் ரஜினி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுதான் ஆக வேண்டும்.. நல்லபடியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications