வெளியானது தகவல்.. திட்டமிட்டபடி ரஜினி கட்சி துவங்குவாரா? எகிறும் எதிர்பார்ப்பு..!
ரஜினி 3 நாளில் திரும்புவாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: இன்னும் 3 நாளில் ரஜினிகாந்த் சென்னை திரும்புவதாகவும், வந்த வேகத்திலேயே தன் அதிரடி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

இந்த 31-ம் தேதி புது கட்சியை அறிவிப்பதாக ரஜினி தெரிவித்திருந்தார்.. அதற்கு முன்னதாக "அண்ணாத்த" படத்தை முடித்து கொடுக்க இருப்பதாகவும் ஏற்கனவே ரஜினிகாந்த் சொல்லி இருந்தார்.
எனவே, ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கிற்கு சில தினங்களுக்கு முன்பு ரஜினி புறப்பட்டு சென்றார்... அங்கேயே சில நாட்களாக தங்கியும் தங்கி ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

சென்னை
இந்த படத்தை முடித்து தந்தால்தான், அரசியல் பணிகளில் இறங்க வேண்டும் என்பதால், 9 மணி நேரம் வரை ஷூட்டிங்கில் இருந்தார் ரஜினி.. வருகிற 29-ந் தேதி சென்னை திரும்பியபிறகு, 31-ந் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவும் திட்டமிட்டு இருந்தார். இந்த சமயத்தில், ஷூட்டிங்கில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
ஆனால், ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.. இருந்தாலும், யாரெல்லாம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்களோ அத்தனை பேரையும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது... கொரோனா இல்லை என்பதால், உடனடியாக ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஹைதராபாத்
இந்த செய்தி பரவியதுமே, ரஜினியின் கட்சி அறிவிப்பு என்னாகும்? 31-ம்தேதி அறிவிப்பு வெளியாகாதா? கட்சி ஆரம்பிக்கும்பணி தடைபடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.. ஆனால், திட்டமிட்டபடி ரஜினி கட்சியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. டாக்டர்களின் ஆலோசனைப்படி ஹைதராபாத்திலேயே இருக்கும் ரஜினிகாந்த் இன்னும் 3 நாளில் சென்னை திரும்ப உள்ளாராம்.

ஆலோசனை
இதனை ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா உறுதி செய்துள்ளார். அதனால், புதிய கட்சியை தொடங்கும் தேதி நிச்சயம் 31-ம் தேதி வெளியாகும் என்றே தெரிகிறது. 27 அல்லது 28-ந் தேதி ரஜினி சென்னை திரும்புவார் என்கிறார்கள்.. அநேகமாக அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து இந்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பினை அடுத்து ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications