தமிழ்நாட்டில் வரும் 1-ம்தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிரடியாக உயருகிறது.. இதோ விவரம்..!
சுங்கச்சாவடி கட்டணம் உயர போவதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: டோல்கேட் கட்டணம் மறுபடியும் உயர போகிறதாம்.. வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2 வருடமாகவே கொரோனா தொற்று இந்தியாவை தாக்கி வருகிறது.. இதனால் அனைத்து மாநிலங்களும், பல லாக்டவுன்களை போட்டும், அவைகளை தளர்த்தியும், ஏராளமான கட்டுபாடுகளை விதித்தும் வருகின்றன..
இதன் காரணமாக தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பொதுமக்கள் பலர் வாழ்வாதாரங்களை இழந்து அவதிக்கு ஆளாகி வருகின்றனர்..

நெருக்கடி
பலரது பல தொழில்கள் முடங்கியுள்ளன... வருமானம் இன்றி பல்வேறு குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கி உள்ளன.. இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களின் தலையில் விழுந்துள்ளது.. இதனால், எரிபொருள் விலையேற்றம் அதிகரித்துவிடுமோ? அதன்காரணமாக விலைவாசிகளும் உயர்ந்துவிடுமோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது.

கலக்கம்
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஏற்கனவே பல்வேறு அவதியில் தவித்து வரும் மக்களுக்கு இந்த சுங்கசாவடி கட்டணம் உயரவிருப்பதாக கூறப்படுவது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

14 சுங்கசாவடி
மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச் சாவடிகளிலும், 8 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும், அந்த கட்டணம் வரும் செப்டம்பர் 1முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இப்போது வெளியாகவில்லை என்றாலும், அநேகமாக அடுத்த வாரம், தேசிய நெடுஞ்சாலைகள் துறை இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு
அந்த 14 சுங்க சாவடிகள் இவைகள்தான்: திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடி, உளுந்தூர்பேட்டை - பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச் சாவடி, சென்னை - தடா சாலையில் உள்ள நல்லூர் சுங்கச் சாவடி, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி, சேலம் - குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம் சுங்கச் சாவடி, திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடி, தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை சுங்கச் சாவடி உள்ளிட்ட இந்த 14 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications