நானே கேட்கும் அளவுக்கு அடிமையாகிட்டேன்.. 10 லட்சம் பாக்கி தொகையினால்.. ஸ்ரீகாந்த் வாக்குமூலம்
சென்னை: நானே கொகைன் போதைப் பொருள் கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் பிரசாத் எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டியது இருந்தது என்றும், இதற்கு அவர் 3 முறை போதைப்பொருள் தந்தனர் என்றும், 4 வது நானே போதைப்பொருள் கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் சனிக்கிழமை 3 மணியளவில் தான் துபாயில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அன்று இரவு அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். அப்போது தான் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பார்ட்டி நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்ததும் தெரியவந்தது.
போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள பிரசாத் என்பவர் தான் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கி இருக்கிறார். குறிப்பாக 250 கிராம் கொகைன் போதைப்பொருள் வழங்கியிருக்கிறார். பிரசாத் தயாரிக்கும் தீக்கிரை படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்து வந்தார். இதில் சம்பள பாக்கி ரூ.10 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கேட்டு செல்லும் போதெல்லாம் கொக்கைன் என்ற போதைப்பொருளை பிரதீப்பிடம் இருந்து வாங்கி ஸ்ரீகாந்துக்கு கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
போலீசாரிடம் வாக்குமூலமாக கூறுகையில், எனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு சென்றபோது எல்லாம் எனக்கு கொகைன் போதைப்பொருள் கொடுத்தனர். 3 முறை நான் கேட்டு சென்றபோதும் எனக்கு போதைப்பொருள் கொடுத்தனர். 4 வது முறை நானே கேட்கும் அளவுக்கு போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டேன். நான் செய்தது தவறு. என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications