"கே.டி.ராகவனை ஹனி டிராப்பிங்கில் சிக்க வைக்க ரூ 7 லட்சம் செலவு செய்தார்களாம்".. எஸ்.வி.சேகர் தகவல்
சென்னை: பாஜகவில் மூத்த தலைவராக இருந்த கே.டி.ராகவனை ஹனி டிராப் செய்ய 7 லட்சம் செலவு செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன என எஸ்வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மீது எஸ்.வி.சேகர் மிகவும் காட்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் அண்ணாமலையின் வார் ரூமை சேர்ந்தவர்கள் எஸ்.வி.சேகரை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் ரணகளம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் எஸ்.வி.சேகரின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் ட்விட்டர் ஸ்பேஸ் விவாதத்தில் எஸ்.வி.சேகர் பேசுகையில், என் தந்தையை குறித்து தவறாக பேசுகிறார்கள். என்னிடம் கேள்வி கேட்டால் நான் பதில் கொடுப்பேன். என் குடும்பத்தினரை வம்புக்கு இழுத்தால் நான் பதிலடி கொடுப்பேன்.
அவர் யாராக இருந்தாலும் கவலையில்லை. அமர்பிரசாத் ரெட்டி யாரென்றே எனக்கு தெரியாது. அவர் அண்ணாமலைக்கு ரைட், லெப்ட், சென்டராக இருந்து கொள்ளட்டும். யாரு வேண்டாம் என்கிறது. நான் மோடியை மட்டுமே கும்பிடுவேன், அவருக்கு கீழ் இருக்கும் பியூனை எல்லாம் நான் கும்பிடும் வழக்கம் எனக்கு இல்லை. பிராமணர்கள் என்றால் பயந்து போவார்கள் என்றால் அது மிகவும் தவறான விஷயம்.
அரசாங்கத்திற்கு நான் வரிகளை செலுத்தி வருகிறேன். எனக்கு ஜாதி , மதம் என்பது எனது தாய், தந்தையரை போன்றது. அதற்கு மேல் எனக்கு நாடு முக்கியம். மற்றதெல்லாம் எனக்கு எதிர்த்த வீட்டு அங்கிள், பக்கத்து வீட்டு அங்கிள் மாதிரிதான். பிராமணர்களுக்கு எதற்கு தனி கட்சி என கேட்கிறார்கள். அவர்களுக்கு அப்பா, அம்மா வேண்டுமா, இல்லை எதிர் வீட்டு அங்கிள் வேண்டுமா என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும். அந்த தேர்தலில் எந்த பிராமணர் ஓட்டு போட போறாங்க. எந்த பிராமணர் புறக்கணிக்க போறாங்கன்னு தெரியலை. 39 தொகுதிகளிலும் பிராமணர்கள் நிற்பார்கள். அப்போது இந்து மதத்தை சாராதவர்கள் கூட இவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். இதை எழுதி வச்சிக்கோங்க. இது சேலஞ்ச். பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
வார் ரூமை வைத்துக் கொண்டு மூத்த தலைவர்களை எல்லாம் அவமதிக்கிறார்கள். பாஜக தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர் கே.டி.ராகவன், அவரை ஹனி டிராப்பிங்கில் சிக்க வைக்க 7 லட்சம் செலவு செய்ததாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி எல்லாரையும் ஒழித்துவிட்டு இவர்கள் மட்டும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பாஜகவை விட்டு அண்ணாமலையை நீக்கினாலும் அவர் சம்பாதித்த பணத்திற்கு தனிக்கட்சியை தொடங்கினாலும் தொடங்குவார் என்றார்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications