10 மசோதாக்கள் நாளை மீண்டும் நிறைவேற்றம்! தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா?
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பாஜக நிச்சயம் பங்கேற்கும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ள தாக தகவல்களும் கிடைத்துள்ளன.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தமிழக அரசு தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.

ஆனால் அவற்றை ஆளுநர் பல நாட்களாக கிடப்பில் போட்டிருந்தார் என விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அண்மையில் கூட கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போடக் கூடாது என உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்டி இந்த மசோதாக்களை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என தமிழக அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் நாளை அதாவது வரும் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நிச்சயம் பங்கேற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications