செயலிழந்த சிறுநீரகங்கள்! மறு சர்ஜரிக்கு ஒத்துழைக்காத உடல்! துடிக்காத இதயம்! மனோஜுக்கு என்னதான் ஆனது?
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் உடல்நிலைக்கு என்ன ஆனது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவருக்கு வயது 48 ஆகிறது. இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் தனது தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மகால் படத்தில் நடித்திருந்தார்.

அண்மையில் கூட மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவர் இன்று மாலை 6 மணிக்கு திடீரென காலமானார் என்ற தகவல் கிடைத்தது. இவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
மனோஜுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாம். அப்போது மாரடைப்பும் ஏற்பட்டதாம். இதனால் மாரடைப்பை சரி செய்ய சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6 தினங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்ததாலும் அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும் அவரது உயிர் இன்று மாலை பிரிந்து விட்டது.
சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது. இன்னும் சிலர் பெசன்ட் நகரிலேயே நாளை (மார்ச் 26) மாலை 4.30 மணிக்கு இறுதி சடங்கு என்கிறார்கள். இப்படியான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, சரத்குமார், நாசர், டி ராஜேந்தர், குஷ்பு, வெங்கட் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி, சேரன், நக்கீரன் கோபால், நடிகை சோனா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எந்த அப்பாவுக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது என நடிகர் சூரி, ஸ்ரீகாந்த், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். பாரதிராஜாவை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை என கண்ணீர் மல்க சில நடிகர், நடிகைகள் தெரிவித்தனர். 83 வயதாகும் பாரதிராஜா இதை எப்படி தாங்கி, இதிலிருந்து மீண்டு வர போகிறார் என்பது தெரியவில்லை என்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications