Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது கமலும் ரஜினியும் இணைந்து புது கூட்டணியா?.. இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கா?.. நம்ப முடியலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி கலந்து கொள்வதை அடுத்து இருவர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பைச் சேர்ந்த நலவிரும்பிகளிடம் காணப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது ரசிகர்கள் முன்னிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பூரித்து போயினர். ஆனால் இன்னும் கட்சி ஆரம்பித்த பாடில்லை.

இதைத் தொடர்ந்து அடுத்த நாள் ஆங்கில புத்தாண்டு அன்று தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக உயர்த்தி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி, நிர்வாகிகள் நியமனம் என ஜெட் வேகத்தில் சென்றது. ஆனால் கட்சிதான் இன்னும் தொடங்கிய பாடில்லை.

கருத்து

கருத்து

ஆனால் கமலின் அரசியல் வருகையோ சற்று வித்தியாசமானது. அவர் அரசியலுக்கு வருவதாக எந்த சமிக்ஞையும் கொடுக்கவில்லை. டுவிட்டரில் ஆளும் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார். அப்போது அரசியலுக்கு வந்தால்தான் அது குறித்த கஷ்டம் புரியும் என தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.

புதிய கட்சி

புதிய கட்சி

இதையடுத்து அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். குறுகிய காலத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டம், கிராம சபா கூட்டங்கள் மூலம் மக்களை வேகமாக சென்றடைந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரது கட்சி சுமார் 4 சதவீதம் வாக்கு சதவீதத்தை பெற்று அசர வைத்தது.

இணைந்து தேர்தல்

இணைந்து தேர்தல்

இந்த நிலையில் ரஜினியும் கமலும் ஆரம்ப காலத்திலிருந்தே நண்பர்கள் என்பதாலும் இருவரும் மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலை கையில் எடுத்துள்ளனர் என்பதாலும் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என இரு தரப்பினரின் நல விரும்பிகளும் எதிர்பார்க்கின்றனர்.

ஆதரிக்கவில்லை

ஆதரிக்கவில்லை

நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆதரவு தருவார் என கமல் நம்பிக்கை வைத்தார். ஆனால் அவர் யாரையும் ஆதரிக்கவில்லை. இருவரும் இணைந்து புதிய கூட்டணி அமைத்தால் ஆட்சியை பிடிக்கலாம் என ரஜினிக்கு அவரது நலவிரும்பிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்

அதற்கேப கமலின் 60-ஆவது பிறந்தநாளையொட்டி நாளை நடைபெறும் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார். எனவே இருவரும் ஒன்றிணையவதற்கான அறிவிப்புகள் வரும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலியும் பூனையும்

எலியும் பூனையும்

ரஜினியும் கமலும் நண்பர்கள் என்றாலும் அவரது ரசிகர்கள் பெரும்பாலானோர் எலியும் பூனையுமாகவே உள்ளனர். இதனால் இவர்களது இணைவை ரசிகர்கள் விரும்புவரா, ஆதரிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே. ஆயிரம் யூகங்கள் வந்தாலும் ரஜினியும் கமலும் அவர்களாகவே இதுகுறித்து அறிவித்தாலொழிய இந்த தகவல்கள்களை நம்புவதற்கில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+