இது லிஸ்ட்லயே இல்லையே.. அசரடித்த தமிழிசை சௌந்திரராஜன்.. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: அன்பார்ந்த தென் சென்னை வாக்காளர்களே! என்னுடன் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் ஜூம் காலில் உங்களுடைய கோரிக்கைகளை குறைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மீட்டிங் லிங்கையும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
17வது லோச்சபாவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து லோச்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல வேட்பாளர்கள் காலை முதல் இரவு வரை தெருத்தெருவாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, பாஜக சார்பில் தமிழிசை சௌந்திரராஜன், திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தமிழிசை சௌந்திராஜன், கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்பி தேர்தலில் களம் இறங்கி உள்ளார். தென் சென்னை தொகுதிக்கு உள்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு தீவிர பிரச்சாரம் செய்தார். இதேபோல் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக இது சிங்காரச் சென்னையா? சீர்கெட்ட சென்னையா? இதுதான சீர்கெட்டு கிடக்கும் தென் சென்னையின் அவல நிலை.. போன முறை வாக்களித்தவர்களுக்கே மீண்டும் வாக்களிக்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி தமிழிசை வீடியோவும் வெளியிட்டிருந்தார். தெருத்தெருவாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வரும் தமிழிசை சௌந்திராஜன், தற்போது நவீன தொழில்நுட்பங்களையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் அன்பார்ந்த தென்சென்னை வாக்காளர்களே! உங்களுடைய கோரிக்கைகளை குறைகளை என்னுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் என்னுடன் ஜூம் இல் இணையுங்கள் என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திராஜன் கூறியுள்ளார். அத்துடன் Zoom Meeting Link: https://us06web.zoom.us/j/87527367249 என்ற லிங்கையும் அனுப்பி உள்ளார்.இந்த முயற்சியை பாஜகவினர் பலரும் வரவேற்றுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications