காட்டன் சேலை.. மணக்கும் மல்லிப்பூ.. பெரிய குங்கும பொட்டு.. அசத்தல் பேச்சு.. கலக்கும் ராதா!
சென்னை: காட்டன் சேரி, கொண்டை, மல்லிப்பூ.. பெரிய சைஸ் பொட்டு, குங்குமம்.. இதுதான் ராதா! தென்சென்னை வேட்பாளர்!
தென்சென்னையின் தெருக்களில் ஓடியாடி வாக்கு கேட்டு வருகிறார் ராதா. இவர் ஒரு திருநங்கை. இவரை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போதுதான், இவர், எம்ஏ ஆங்கிலம் இலக்கியம் முடித்தவர் என தெரியவந்தது.
தென்சென்னையில் சுயேச்சையாக போட்டியிடுவதை பற்றி அவர் சொல்லும்போது, "முதலில் திருநங்கை வேட்பாளராக நின்றால் மக்களிடம் விழிப்புணர்வு இருக்காது. ஆனா இப்ப அப்படி கிடையாது.

ரொம்ப சந்தோஷம்
மக்கள் என்னை பார்த்ததும், வாங்கம்மா, தண்ணி குடிங்க, சாப்பிடுங்கன்னு ஆசையா சொல்றாங்க. யாருக்கு ஓட்டு போடறதுன்னு தெரியாம நாங்க இருக்கிறோம்.. நல்லவேளை.. நீ வந்தேம்மா என்று சொல்றாங்க. கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மனஉளைச்சல்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது மனஉளைச்சலை ஏற்படுத்தியது. நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென மக்கள் நினைக்கிறாங்க" என்றவர் திடீரென சுருதி சுத்தமாக ராதா பாட ஆரம்பிக்கிறார்.

அவியல், பொரியல்
இதை பற்றி கேட்டால், நான் 20 வருஷமாக கர்நாடக இசை கத்துக்கிட்டேன். பரதம் கத்துக்கிட்டேன் என்று புது ஷாக் தருகிறார். அது மட்டுமில்லை.. இவர் அண்ணாமலை யூனிவர்சிட்டியில் வேலை பார்த்து கொண்டிருந்தாராம். ஆனால் திடீரென சமையல் வேலை அதாவது குக்-ஆக இருக்கிறாராம். பொரியல், அவியல் இது இரண்டும்தான் ராதாவின் ஸ்பெஷலாம்.

உதவும் குணம்
யார் வந்துஉதவின்னு கேட்டாலும் கட்டாயம் செய்யும் குணம் உடையவர் ராதா என்கிறார்கள்! எப்படியோ ஜெயிச்சு வந்தாலும் இதே குணம் எப்பவும் இருந்தால் சரிதான்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications