தென் சென்னையில் பாஜக வேட்பாளர் இவரா? திமுக தொகுதின்னு தெரிஞ்சும்? தில் பாத்தீங்களா? கச்சேரி இருக்கு
சென்னை: தமிழக பாஜகவில் தேர்தல் வியூகம் உச்சக்கட்ட பரபரப்பில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில் பாஜக சார்பில் களமிறக்குவது யார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.
கடந்த முறை எம்பி தேர்தலை எடுத்துக் கொண்டால், சேப்பாக்கம் தொகுதியை குறி வைத்துதான், களப்பணிகளை மேற்கொண்டிருந்தார் குஷ்பு.. ஆனால், கடைசி நேரத்தில் குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஆயிரம் விளக்கு தொகுதியை ஸ்டாலினின் தொகுதி என்றே அழைப்பார்கள்.. திமுகவின் கோட்டை என்று தெரிந்தும் குஷ்புவை துணிந்து களமிறக்கியது பாஜக. திமுகவின் கோட்டை என்று தெரிந்தும் குஷ்புவை களமிறக்கியது பாஜக.

இஸ்லாமியர்கள்: இத்தனைக்கும் அந்த நேரத்தில், சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.. பெரும்பாலான இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லவே வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவிகொண்டிருந்தன. இதெல்லாம் தெரிந்துதான், இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை குஷ்பூ குறி வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார் குஷ்பு.
எனினும், குஷ்புவின் அயராத உழைப்பும், தொகுதி மக்களிடம் நெருங்கி பழகி இயல்பாக பேசியதும், குஷ்புக்கான நன்மதிப்பை பெற்று தந்தது.. தோல்வியை தழுவினார் என்றாலும், திமுக கோட்டைக்குள் குஷ்பு பெற்ற வாக்குகள், பாஜக மேலிடத்துக்கு அதிருப்தி ஏற்படாமல் பார்த்து கொண்டது. திமுக தொகுதியில், திமுகவையே சரமாரியாக விமர்சித்து ஓட்டு கேட்டதை பார்த்து பாஜகவே மலைத்து பார்த்தது. இது ஓரளவு குஷ்புவுக்கு அனுதாப வாக்குகளையும் பெற்று தந்தது என்றே சொல்லலாம்..
பாஜக சீட்: அந்தவகையில், இந்த முறையும் குஷ்புவுக்கு பாஜகவில் சீட் நிச்சயம் என்கிறார்கள். சென்னையில் தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் குஷ்புவை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்..
இதே தென்சென்னை தொகுதியில் போட்டியிட மூத்த தலைவர்கள் கரு.நாகராஜன், திருப்பதி நாராயன், ரமேஷ் சிவா, எஸ்.ஜி.சூரியா உள்பட பலர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டிருக்கிறதாம்.
குஷ்பு களம்: அந்த வகையில் தென்சென்னை அல்லது மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்றும், அவருடைய பெயரும் பரிசீலனை பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது..
இந்த தகவல்கள் குறித்து குஷ்பு கூறும்போது, "எனக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது கட்சி வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி பெயர் அடிபடுவது வழக்கமானதுதான். கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன்" என்று பெருந்தன்மையோடு சொல்கிறார்.
பாஜக மேலிடவே குஷ்புவை களமிறக்குவதால், தொகுதி தாராளங்களையும் கட்சியே மேற்கொள்ளும் என்று தெரிகிறது. கடந்த முறை தேர்தலிலும், இதற்கான ஒரு மிகப்பெரிய செலவை மேலிடம் ஏற்றுக்கொண்டதாம்.
திமுக விமர்சனம்: மொத்தத்தில், திமுகவை சரமாரியாக விமர்சிப்பதுடன், மக்களிடமும் நெருங்கி பழகி வாக்குகளை பெறுவதில் குஷ்பு மீது பாஜக தலைவர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், குஷ்பு களமிறக்கப்படும் தொகுதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications