வங்கக்கடலில் காற்றழுத்தம்... தீவிரமடையும் பருவமழை - 15 வரை கோவை, நீலகிரியில் அடி வெளுக்கும்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிகக் கன மழையும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று சில தினங்களுக்கு முன்பு இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. வானிலை மையம் அறிவித்தது போலவே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 9 செமீ, சோலையாறு பகுதியில் 8 செமீ, வால்பாறையில் 7 செமீ பந்தலூரில் 6, ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம், கும்மிடிப்பூண்டி, பெரியாறு, பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி, அம்பாசமுத்திரம்,திருச்சுழி, பாபநாசம் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவானதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

எங்கெங்கு மழை
வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிகக் கன மழையும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழையும் பெய்யக்கூடும்.

மழை வெளுக்கும்
ஜூலை 12 நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கன மழையும், கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

15ஆம் தேதி வரை மழை
13ஆம் தேதி முதல் ஜூலை 15 வரைக்கும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், ஈரோடு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேக மூட்டம் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்று பலமாக வீசும்
இன்று ஜூலை 11 அந்தமான் கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடலில் காற்று
11.07.2021 முதல் 13.07.2021 வரை : கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 11.07.2021 முதல் 15.07.2021 வரை: தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications