ஜில்லுன்னு பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை..எல் நினோவும் இருக்காம்..எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை: இந்தியாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த ஆண்டு இயல்பான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை மாதங்களில் சுமார் 83.5 செ.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளுக்கு இந்த தென்மேற்கு பருவமழை முக்கியமானதாகும். ஆண்டு தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இருந்து தொடங்குவது வழக்கமாகும்.

இந்தியாவுக்கு பெருமளவு மழை தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. இந்தியாவின் விவசாய வருமானத்திற்கு இந்த பருவமழையே முக்கிய காரணியாக உள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டு மிகக்கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை பற்றிய முக்கிய அறிவிப்பினை இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே கொட்டி தீர்த்தது. வடகிழக்கு பருவமழையும் அதிகமாகவே பெய்தது. குளிரும் வாட்டி வதைத்தது. இந்த ஆண்டு வெயிலும் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.
எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண். இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை.
சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, சில நேரங்கள் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது.
சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உள்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன.
எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை எல் நினோ உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications