கொரோனா மத்தியில் குளுகுளு செய்தி.. மே 16-இல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
சென்னை: மே 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே அதிலும் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.நெல்லையில் தற்போது மழை பெய்து வருகிறது. விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.

அந்த வகையில் இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 2 தினங்களில் காலை 11.30 முதல் பிற்பகல் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகபட்சமாக குமரி மாவட்டத்தில் புத்தன் அணைப் பகுதிகயில் 4 செ.மீ. மழையும் சுரளக்கோட்டில் 3 செ.மீ. மழையும் பதிவானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்தகண்டனம், வட்டானம் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவை ஒட்டியுள்ள கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மே 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. அதற்கான சாதகமான சூழல் அமைந்துள்ளது. அந்தமான் பகுதிகளில் 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications